அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஜேஇஇ தேர்வு - அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருத்தங்களை மேற் கொள்ளலாம்.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும்.

இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும்.இதில் முதல்நிலை தேர் வானது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் 2 முறை நடத்தப்படும்.

இந்நிலையில் நடப்பாண்டு ஜேஇஇ தேர்வு ஜனவரி 6 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 3-ல் தொடங்கி அக் டோபர் 10-ம் தேதியுடன் முடி வடைந்தது. நடப்பாண்டு சுமார் 10.2 லட்ச மாணவர் கள் தேர்வுக்கு விண்ணப்பித் துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பதிவு செய் துள்ள விண்ணப்பங்களில் மாணவர்கள் அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருத்தங்களை மேற் கொள்ளலாம்.இதற்கான வசதிகள் என்டிஏ இணையதளத்தில் செய்யப் பட்டுள்ளன.

மாணவர்கள் http://nta.ac.in என்ற இணைய தளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்ளலாம். தேர்வுக் கான ஹால்டிக்கெட்கள் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும்.தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும். கூடுதல் விவரங்களை மேற் கண்ட இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments