அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

4-வது முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி வெற்றி பெற்ற கேரள மூதாட்டி!

இந்தியாவில் 100 சதவீத படிப்பறிவு உள்ள மாநிலமாக கேரளா திகழ்கிறது. கேரளாவில் முதியோர் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கண்ணூர் மாவட்டம் பினராய் பஞ்சாயத்துக்குட்பட்ட பரப்பிராம் பகுதியைச் சேர்ந்த பங்கஜாக்சி என்ற 78 வயது மூதாட்டி முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து படித்து வந்தார். தொடக்க மற்றும் இடைநிலை தேர்வுகளில் வெற்றி பெற்ற பங்கஜாக்சி அடுத்து உயர்நிலை தேர்வான எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதிய பங்கஜாக்சி முதல் முயற்சியில் வெற்றி பெறவில்லை. இதனால் அவர், மனம் தளராமல் அடுத்தடுத்து முயற்சி செய்தார்.
3 முறை முயற்சி செய்தும் பங்கஜாக்சியால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. தொடர்ந்து தோல்வியே கிடைத்ததால் அடுத்து தேர்வு எழுத பங்கஜாக்சி தயக்கம் காட்டினார். தேர்வு எழுத தயங்கிய பங்கஜாக்சிக்கு அவரது பேரக்குழந்தைகள் ஊக்கமளித்தனர். அந்த குழந்தைகள் கூறும்போது, நாங்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால் எங்கள் பெற்றோர் பரிசுகள் தருவர். அதுபோல நீங்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றால் உங்களை ஊட்டி, மைசூருக்கு சுற்றுலா அழைத்துச் செல்வோம் என்று ஆசை காட்டினர்.
பேரக்குழந்தைகளின் வேண்டுகோளை ஏற்று பங்கஜாக்சி 4-வது முறையாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றார். இதனை பங்கஜாக்சியின் பேரக்குழந்தைகள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்கள் பாட்டிக்கு வாக்களித்தப்படி மைசூர் மற்றும் ஊட்டிக்கு சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்ந்தனர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments