அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பி.எட்., - எம்.எட்., மாணவர் சேர்க்கை சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நிறைவு

பி.எட். மற்றும் எம்.எட். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் அசல் சான்றிதழ்களின் சரிபார்ப்பு இன்றுடன் முடிகிறது. சான்றிதழ் சரிபார்க்காத மாணவர்களின் சேர்க்கை இனி அங்கீகரிக்கப்படாது என கல்லுாரிகள் எச்சரிக்கப் பட்டுள்ளன.


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் 700க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளில் ஜூலை மற்றும் ஆகஸ்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்த மாணவர்களின் சேர்க்கை சரியாக நடந்துள்ளதா உரிய கல்வி தகுதியுடன் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பதை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை ஆய்வு செய்யும்.

இந்த ஆய்வுக்கு மாணவர்களின் அசல் சான்றிதழ்களை பல்கலையின் அதிகாரிகள் குழுவிடம் சமர்ப்பித்து கல்லுாரிகள் தரப்பில் உரிய ஒப்புதல் பெற வேண்டும்.இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சோதனை அக். 10ல் துவங்கியது. இந்த சோதனை இன்றுடன் முடிய உள்ளது. இன்றைக்குள் சான்றிதழ் சரிபார்க்கப்படாத மாணவர்களின் சேர்க்கை அங்கீகரிக்கப்படாது.

எனவே எந்த மாணவரின் சேர்க்கையும் விடுபடாத வகையில் அவர்களின் சான்றிதழ்களை கல்லுாரிகள் தாக்கல் செய்ய வேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments