அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

செயல் இழந்த செயல்வழி கற்பித்தல்! பயிற்சி அளிக்க கோரிக்கை

மத்திய அரசின், அனை வருக்கும் இடைநிலை கல்வி திட்டப்படி, ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கான, கல்விசார் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. இதில், நடப்பு கல்வியாண்டில், 'ஷால ஷித்தி' திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம், பள்ளிகளில் உள்ள வளங்களை பயன்படுத்தி, கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்துவது ஆகும்.இதற்காக, கல்வியாண்டு துவக்கத்தில், ஒருங்கிணைந்த கணினி தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி, அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டது. அதற்கு பின், எவ்வித பயிற்சிகளும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்படவில்லை. செய்வழி கற்பித்தலை ஊக்குவிக்க துவங்கப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, பாடவாரியாக எளிதில் கிடைக்கும் பொருட்கள் கொண்டு, செயல்திட்டம் உருவாக்கி கற்பிக்க, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதற்காக கொண்டு வரப்பட்ட ஷாலஷித்தி திட்டத்தை, ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த, ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.'இத்திட்டத்தை நடைமுறைப் படுத்தினால், மனப்பாடம் செய்து கற்கும் முறைக்கு முடிவு கட்டலாம். கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, செயல்வழியில் கற்பித்தால், மாணவர்கள் படித்தது மறக்க வாய்ப்பிருக்காது' என்றார்.
Reactions

Post a Comment

0 Comments