அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Wednesday, May 30, 2018

2018 - 19 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு அதிரடி மாற்றங்கள்

 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணை எண்: 403 ன் படி;
1) பணி நிரவல் செய்த பிறகு தான் கலந்தாய்வு நடத்த வேண்டும்.

2) கலந்தாய்வு புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி மாவட்டங்கள் அடிப்படையில் நடத்தப்படும்.

3) ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து வேறு கல்வி மாவட்டத்திற்கு மாறுதல் பெறும் தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கும் CEO தான் ஆணை வழங்குவார்.

4) மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதன் பிறகு தான் spouse.

5) கலந்தாய்வு விண்ணப்பத்துடன் முன்னுரிமைக்கான சான்றிதழ் இணைத்து கொடுக்க வேண்டும்.

6) இந்த ஆண்டு முதல் பொது கலந்தாய்வில் மாறுதல் பெறும் ஆசிரியர் 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.

7) முன்னுரிமை அடிப்படையில் மாறுதல் பெற்ற ஆசிரியரின் மாறுதல் ஆணையில் முன்னுரிமை குறிப்பிட வேண்டும்.

8) பத்தி 15-ன் படி பணிநிரவல், ஆசிரியர்கள் மாறுதல், பிறகு தான் பதவி உயர்வு என்ற முறை பின்பற்ற வேண்டும்.

2018 - 19
ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு  அதிரடி மாற்றங்கள்

1. மேல்நிலை , உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் - மாறுதல் ஆணை  வழங்குபவர்
 -   DEO

2. மேல்நிலை , உயர்நிலை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகை ஆசிரியர்கள் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் மாறுதல - மாறுதல் ஆணை வழங்குபவர்- CEO

3. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரகள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள்  மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் - மாறுதல் ஆணை வழங்குபவர்
JD (HS)

4. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்- மாறுதல் ஆணை வழங்குபவர் - JD ( P)

5. கணினி ஆசிரியர்கள்  மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்  - மாறுதல் ஆணை வழங்குபவர்-  JD ( Vocational).

6. 01.06.2017 க்கு முன் பணியில் சேர்ந்த  அனைத்து ஆசிரியர்களும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
(2017 -  18 ல் பணிநிரவல் மூலம் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்  மேற்கண்ட தேதியில் இருந்து விதிவிலக்கு)

7. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட  மாறுதல் பெறுதல் மாறுதல் பெரும்  ஆசிரியர்கள் மூன்று வருடங்கள் அதே இடத்தில் பணி செய்ய வேண்டும்.

 8. ஓர் ஆண்டு பணிக்காலத்திலிருந்து விலக்கு எந்த பிரிவினருக்கும் வழங்கப்படவில்லை.
( 2017 - 18 பணிநிரவல் மூலம் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தவிர).

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது