அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Higher_Secondary_First_Year_Exam_March_2018_Result_Analysis


Higher_Secondary_First_Year_Exam_March_2018_Result_Analysis - click here

மேலுள்ள லிங்கை க்ளிக்கவும் செய்யவும்..‌

  • பள்ளிகள் வகைப்பாடுவாரியான தேர்ச்சி சதவீதம்
  • பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம் பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவிகிதம் 
  •  முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவிகிதம் 
  • மாவட்டஅளவில் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற மாவட்டங்கள் 
  • PERFORMANCE ANALYSIS OF SCHOOL CANDIDATES
  • GOVERNMENT SCHOOLS / DISTRICT PERFORMANCE
  • GROUP WISE PERFORMANCE
  • MANAGEMENT WISE PERFORMANCE
  • SUBJECT WISE PERFORMANCE
  •  GENDER PERFORMANCE
  • - DIFFERENTLY ABLED CANDIDATES PERFORMANCE




முதல் முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வுகள் நடப்பது போல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.
இதையடுத்து இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு மார்ச் 7ம் தேதி முதல் ஏப்ரல் 16ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7070 மேனிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படித்த 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ, மாணவியரும், தனித் தேர்வர்களாக 1753 மாணவ, மாணவியரும் எழுதினர்.
இந்நிலையில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், செல்போனில் எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் வெளியாகியுள்ளன. இதில் மாணவர்கள் 84.7 பேர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இதில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 94.6 சதவீதம் பேர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2% பேர் அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் 97.3% தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது. 94.6% திருப்பூர் மாவட்டம் இரண்டாமிடம் பிடித்துள்ளது.
Reactions

Post a Comment

0 Comments