அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை 26ல் கவுன்சிலிங் துவக்கம்

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 26ல் துவங்குகிறது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில், 150 எம்.பி.பி.எஸ்., இடங்களும், காரைக்கால் கிளையில், 50 இடங்கள் என மொத்தம், 200 இடங்களுக்கு, 

2018- - 19ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு, கடந்த ஜூன் 3ம் தேதி, நாடு முழுவதும், 291 மையங்களில் நடத்தப்பட்டது. இத்தேர்வில், 1.56 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவு, கடந்த 8ம் தேதி, இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தரவரிசை அடிப்படையில், இடஒதுக்கீடுபிரிவின் தகுதிபட்டியலும் வெளியிடப்பட்டது. வரும், 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை, முதற்கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. கலந்தாய்வு: முதல் நாளில் பொதுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள், புதுச்சேரி மாற்றுத் திறனாளி பிரிவு இட ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 27ல், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும், 28ல், புதுச்சேரி பொதுப் பிரிவு, ஓ.பி.சி., எஸ்.சி., என்.ஆர்.ஐ., பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது.

ஜிப்மர் மருத்துவக் குழுவினர்மூலம், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள் மற்றும் புதுச்சேரி மாற்றுத் திறனாளிகளின் உடல் தகுதி குறித்து, மருத்துவ ஆய்வு செய்யப்படும். சான்றிதழ்கள் அவசியம்: ஜிப்மர் கல்வி வளாகத்தின் தேர்வுப் பிரிவில், சான்றிதழ் மற்றும் பயோமெட்ரிக்ஸ்சரிபார்த்தல் நடைபெறும். மாணவர்கள் கலந்தாய்விற்கு வரும்போது, தங்களின் அசல் சான்றிதழ் , போனபைட் சான்றிதழ் ( கல்வி நிறுவனத்தின் மூலம் கையொப்பம் இடப்பட்டது), சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட குடியிருப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, நுழைவுச்சீட்டுடன், அனைத்து அசல் மற்றும் நகல் படிவத்தை எடுத்து வர வேண்டும என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மாணவர்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகத்தை தேர்வு செய்த பின், எந்தசூழ்நிலையிலும் வளாகத்தை மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது. கலந்தாய்வின்போது, ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் மாற்றம் செய்வது அனுமதிக்கப்படாது. ஆதாரமற்ற சான்றிதழை கொண்டுவரும் மாணவர்கள் கலந்தாய்வில் இருந்து நிராகரிக்கப்படுவர். கலந்தாய்வு நடந்த அன்றுமதியம், மாணவர்கள் தங்களுக்கான கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என, ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Reactions

Post a Comment

0 Comments