அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பின்னடைவா?: என்ன சொல்கிறது ரிசல்ட்?

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வு எழுதியவர்களின் அடிப்படையில் தமிழக மாணவர்கள் மிகக் குறைவான சதவீதத்தில் தேர்வாகியுள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவம், பல்மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவற்றில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இருந்து 13 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில், தமிழக மாணவர்கள் தேர்வு எழுதியவர்களின் அடிப்படையில் குறைவான சதவீதத்திலேயே தேர்வாகியுள்ளனர். தமிழகத்தில் இருந்து 1,14,602 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 45,336 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது, 34 சதவீதம் மட்டுமே. இந்திய அளவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தமிழகம் 35வது இடமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
இதில், ராஜஸ்தான் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த 79,057 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 58,738 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 74 சதவீதம் ஆகும். ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக டெல்லி(74), ஹரியானா(73), ஆந்திர பிரதேசம் (73), சண்டிகர் (72) சதவீதம் எடுத்து முதல் 5 இடங்களில் இடம்பிடித்தனர்.
கேரளா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேல் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் கேரளாவில் 1,08,907 பேர் தேர்வெழுதி, 72,682 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
நாட்டிலே அதிகப்படியாக உத்தரபிரதேசத்தில் 76,778 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்வாகியுள்ளனர். அதற்கடுத்ததாக கேரளா (72,682), மகாராஷ்டிரம் (70,184) மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Reactions

Post a Comment

0 Comments