அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் எப்போது? மருத்துவ கல்வி இயக்ககம் முக்கிய அறிவிப்பு

சென்னை: நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியானது. நாடு முழுவதும் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதையடுத்து மருத்துவ சேர்க்க குறித்த முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஜூன் 11 முதல் மருத்துவ மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூன் 18 வரை விண்ணப்பம் வழங்கப்படும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 19 வரை அவகாசம் அளிக்கப்படும்.
ஆனால் மாணவர் சேர்க்கை குறித்த தேதிகள் அறிவிக்கப்படவில்லை. நீட் முடிவுகள் வெளியானதை அடுத்து மருத்துவ கல்வி இயக்ககம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் ஜூன் 28ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஜூலை 7-10 க்கு இடையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஜூலை 22-23ல் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் நாள் ஜூன் 10ல் முறையாக அறிவிக்கப்படும். ஆகஸ்ட் 1ம் தேதி கல்லூரிகள் தொடங்கும். மேலும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தகவலை பெற மருத்துவக்கல்வி இணையதளத்தை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source: oneindia.com
Reactions

Post a Comment

0 Comments