அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Tuesday, June 5, 2018

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 11ம் தேதி துவங்குகிறது.இது குறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கு, ஜூன், 10ல், அறிவிப்பாணை வெளியிடப்படும். விண்ணப்ப வினியோகம், 11ம் தேதி துவங்கும். ஜூன், 18 மாலை, 5:00 மணி வரை, அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில்,விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 19ம் தேதி மாலை, 5:00 மணிக்கு முன், 'மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர், ஈ.வெ.ரா., நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம்' என்ற, முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். தர வரிசை பட்டியல், ஜூன், 28ல் வெளியிடப்படலாம். ஜூலை, 7ல் முதற்கட்ட கவுன்சிலிங், 22ல், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெற வாய்ப்புள்ளது. விபரங்களை இணையதளத்தில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது