அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

உர்ர்ர்.. கிர்ர்ர்... சூரியனின் சத்தம் இப்படியா இருக்கும்?.. நாசா வெளியிட்ட ஆடியோ!

நியூயார்க்: சூரியனின் சத்தம் எப்படி இருக்கு என்று நாசா கண்டுபிடித்து இருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிக்கு பின் இதை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இதற்காக சூரியனில் இருந்து வெளியாகும் ஒலியை நாசா வெளியிட்டு இருக்கிறது. அவர்களின் இணையதள பக்கத்தில் இதை டவுன் லோட் கூட செய்து கொள்ள முடியும்.
மேலும், இதை வைத்து பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய இருக்கிறார்கள். இது உலக வரலாற்றில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சூரியனை சுற்றி 
சூரியன்
சூரியனை சுற்றி நிறைய துகள்களும், அணுக்களும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதேபோல் நிறைய அலைநீளத்தில் வெவ்வேறு அலைகள் அதை சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. இந்த அலைகள் சூரியனில் ஒரு வித ஒலியை உருவாக்கும். அதேபோல் சூரியனில் ஏற்படும் வெடிப்புகளும் அங்கு ஒலியை உருவாக்கும். இதைதான் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
சத்தம்
சத்தம் இப்படித்தான் இருக்கும்
சூரியனில் இருந்து வந்த சத்தம் தற்போது வெளியாகி இருக்கிறது.இதை நாசா தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. மொபைல் வைப்ரேட் ஆவது போல இதில் இருந்து சத்தம் வருகிறது. இதை நாசா தனது சவுண்ட் கிளவுட் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறது.

எப்படி கண்டுபிடித்தார்கள் 
எப்படி நடந்தது
இதற்காக நாசாவும், ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமும் சேர்ந்து செயல்பட்டு இருக்கிறது. சோகோ என்று அழைக்கப்படும் சோலார் மற்றும் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற கருவி மூலம் சூரியனில் இருந்து வெளியாகும் சத்தத்தை மட்டும் தனியாக எடுத்து இருக்கிறார்கள். கடந்த 20 வருடமாக சூரியனில் வெளியான சத்தத்தை வைத்து இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

பயன்படுத்துவார்கள்
சோதனை

இது இன்னும் பல விஷயங்களுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. சூரியனை பார்த்து செய்ய முடியாத சோதனைகளை இதை வைத்து செய்ய இருக்கிறார்கள். இது உலக வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாக பார்க்கப்படுகிறது.
Reactions

Post a Comment

0 Comments