அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Saturday, July 28, 2018

மீண்டும் நலம்பெற்று வரவேண்டும்.. கருணாநிதி படித்த பள்ளியில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை!

திருவாரூர்: கருணாநிதி மீண்டும் நலம் பெற்று வரவேண்டி திருவாரூரில் அவர் படித்த பள்ளியில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

நாகை மாவட்டம் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஜூன் 3ஆம் தேதி இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

கருணாநிதி மாணவர் பருவத்திலேயே தனது பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார். மாணவர் பருவத்திலேயே சமூக நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

50 ஆண்டு அரசியல்

தனது வாழ்நாளில் 50 ஆண்டுகளை அரசியல் வாழ்க்கையில் கழித்துள்ளார்.


இதுவரை தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் அவர் தோல்வியை சந்தித்ததில்லை.

உடல் நலக்குறைவு

கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிப்பட்டுள்ள கருணாநிதி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை முதல் அவரது உடல் மிகவும் நலிவடைந்துள்ளது.

காவேரி மருத்துவமன

மூன்று நாட்களாக சென்னை கோபாலபுரம் வீட்டிலேயே அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்றிரவு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உடல்நிலையில் முன்னேற்றம்

அவரை சிறப்பு மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

வ.சோ ஆண்கள் பள்ளி

இந்நிலையில் கருணாநிதி நலம் பெற வேண்டி திருவாரூரில் உள்ள அவர் படித்த வ.சோ ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

2000க்கும் மேற்பட்ட மாணவர்கள்

2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த பள்ளியில் கருணாநிதி 1939 - 1940ஆம் ஆண்டு படித்துள்ளார்.

கட்டடத்தை திறந்து வைத்தார்

கடைசியாக 2016ஆம் ஆண்டு திருவாரூர் வந்த கருணாநிதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த பள்ளிக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

புகழாரம்

பள்ளிப் பருவத்திலே கவிதை, கட்டுரை என எழுதி தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர் கருணாநிதி என்றும் பேச்சாற்றல் சமயோசிதமாக யோசிப்பவர் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் புகழாரம் சூட்டினார்.

கூட்டுப் பிரார்த்தனை

தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்த முன்னாள் மாணவர் கருணாநிதி மீண்டும் நலம் பெற வேண்டி இந்த கூட்டு பிரார்த்தனை நடத்தப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது