அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Thursday, July 26, 2018

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி


திருச்சி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி

தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு

அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம் .

டிசைன் ஒவியப் பள்ளி திருச்சி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளிடையே உள்ள ஓவியத் திறனை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் ஒவியப் போட்டியினை திருச்சியில் நடத்துகிறது.
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். பள்ளியில் படிப்பதற்கான அடையாளச் சான்றிதழ் அல்லது அடையாள  அட்டை உள்ள மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உறுதுணையுடன் சொந்த பொறுப்பில் வந்து செல்ல வேண்டும். போட்டியில் கேட்கப்படும் தலைப்பில் மட்டும் ஓவியம் இருக்க வேண்டும். ஓவியத்திற்கு வண்ணம் தீட்டக் கூடிய வண்ணக்கலர்கள், காகிதப் பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் போட்டியாளரே கொண்டு வர வேண்டும். எல்.கே.ஜி, யூ.கே.ஜி பயிலும் மாணவர்கள் கொடுக்கப்படும் படத்திற்கு வண்ணம் தீட்ட வேண்டும். முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு தலைப்பிலும், நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சாலை பாதுகாப்பு தலைப்பிலும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எனது இந்தியா தலைப்பிலும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்ட வேண்டும். போட்டியானது ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிரங்கில் காலை 11 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும். போட்டியாளர் மேற்கண்ட நேரத்தில்  ஏதேனும் ஒரு மணி நேரத்தில் போட்டியில் பங்கேற்கலாம் . பங்கேற்பாளர் அனைவருக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழும், வெற்றியாளர்க்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படும். மேலும்  விவரங்களுக்கு 9842299412,
9566673472  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது