அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Wednesday, July 25, 2018

உங்கள் போனை கட்டளையிட்டால் போதும், Google Duo Latest Update!

கூகுள் டூயோ புதிய அப்டேட்டின் ஒரு

பகுதியாக கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் டேப்லெட் சென்டிரி இடைமுகம்(Tablet Centric Interface) அறிமுகம் செய்யப்படுகிறது. கூகுள் டூயோ, பிரபலமான அழைப்புப் பயன்பாடு செயலி இப்போது புதிய புதுப்பிப்பைப் பெற்றுள்ளது, இதை பயனர்கள் கூகுள் அசிஸ்டன்ட் மூலம் அழைப்புகளை அழைக்க அனுமதிக்கிறது.


இப்போது கூகுள் அசிஸ்டன்ட் பயனர்கள், தொடர்பு மற்றும் அழைப்புக்கான குரல் கட்டளையைப் மட்டும் கூறினால் போதும். நீங்கள் கூகுள் அசிஸ்டன்ட் பயனாளர் என்றால், உங்கள் கூகுள் டூயோ செயலி மூலம் அழைப்பு செய்ய கால்(Video call) என்று சொல்லி உங்கள் நண்பர் பெயரை மட்டும் சொன்னால் போதும். கூகுள் டூயோ உங்கள் நண்பருடன் அழைப்பை உடனடியாக தொடங்கி விடும்.
உங்கள் நண்பர் கூகுள் டூயோ பயனாளர் இல்லாவிடின், அவர்களுக்கு ஹாங்கவுட்ஸ்(Hangouts) வழியாக தொடர்பு மற்றும் அழைப்புகளை இணைக்கின்றது இந்த புதிய அப்டேட்.
புதிய கூகுள் டூயோ அப்டேட் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கிடைக்குமென்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக கூகுள் டூயோ ஒரே நேரத்தில் உங்களின் பல சாதனங்களில் எடுக்கும் விதம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
புதிய மேம்படுத்தலில் டப்ளேட் பயனாளர்களுக்காகவே புதிய வடிவமைப்பை கூகுள் டூயோ அப்டேட் செய்துள்ளது. டேப்லெட் சென்டிரி இடைமுகம்(Tablet Centric Interface) விரிவான திரையுடன் கூடிய கால் வசதியை முழு திரைக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த புதிய கூகுள் டூயோ அப்டேட் பயனாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தை சிறப்பாகியுள்ளது.
கூகுள் டூயோ பயன்பாட்டை மிக உயர்ந்த தரம் வாய்ந்த அழைப்பு செயலியாக விளம்பரப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது