அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

ஆறாம் விரல் போல் மாறியுள்ள டிஜிட்டல் டெக்னாலஜி வரும் 1ம் தேதி முதல் டிஜிட்டல் பேங்க் சேவை துவக்கம்

சென்னை: டிஜிட்டல் டெக்னாலஜி ஆறாவது விரலாக மாறி வருகிறது. எல்லாமே டிஜிட்டலுக்கு மாறிக்கொண்டிருக்கும் காலம் இது.பணத்திலும் டிஜிட்டல் மணி வந்துவிட்டது. தொலைபேசி கட்டணம், மின்கட்டணம் எல்லாவற்றையும் இணையம் மூலமே செலுத்தும் வசதி பிரபலமாகி இருக்கிறது.

இணையம் மூலம் பொருட்களை வாங்கும் மின்வணிகம் சக்கைப்போடு போடுகிறது. சேவைகள் எல்லாம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. அந்த வகையில் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை அனைத்தும் நடைபெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதில் வங்கி மற்றும் பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயம் ஆகி வருகிறது. இதனால் டிஜிட்டல் பேங்கிங் இந்தியா தன் சேவையை வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் துவங்குகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் சேவைகள் தொடர்பான விளக்கம் தருதல். அனைவரையும் டிஜிட்டல் சேவைக்கு ஊக்குவித்தல் மற்றும் நடைமுறைபடுத்தல்.

இது போன்ற சேவைகள் மூலம் அதிக பயனாளிகள் டிஜிட்டல் முறைகளை பின்பற்ற ஒரு வாய்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒற்றை வரியில் சொல்வதானால் நாட்டை டிஜிட்டல் மயமாக்கி அதில் பொதுமக்கள் பயன் பெறும் வழிமுறைகள் நடந்து வருகிறது அந்த வகையில் டிஜிட்டல் பேங்க் இந்தியாவின் சேவை நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்பது நிதர்சனமான உண்மை.
Reactions

Post a Comment

0 Comments