அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Saturday, August 11, 2018

சூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்படும் - நாசா

சூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவப்படும் என நாசா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சூரியப்புயல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற செயற்கைகோள் சனிக்கிழமை அதிகாலை விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை தள்ளி வைக்கப்பட்டது.
1970ம் ஆண்டு விண்வெளிக்கு சென்ற ஹீலியஸ்2 என்ற விண்கலம் சூரியன் குறித்த தகவலை 27ஆயிரம் மில்லியன் மைல் தூரத்தில் இருந்து ஆய்வு செய்தது. இதுவரை ஹீலியஸ்2 விண்கலம் பல தகவல்களை அளித்து வந்தாலும், அதனால் உலகத்தின் அழிவை ஏற்படுத்த கூடிய சூரிய புயல் தொடர்பான தகவல்களை சேகரிக்க முடியாம் போனது.
இதையடுத்து, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சூரியனுக்கு மிக அருகில் சென்று அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டது. அதன்படி பல்லாயிரக்கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளிப்படுத்தும் சூரியனை 40 லட்சம் மைல்கள் தொலைவில் இருந்து ஆய்வு மேற்கொள்ளும் " பார்க்கர் சோலார் புரோப் " செயற்கைக்கோளை நாசா உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், எதிர்பராத விதமாக பார்க்கர் சோலார் புரோப் செயல்பாடுகளில் சில மாறுதல்கள் இருந்ததால் அது ஞாயிற்றுக்கிழமை (12-08-2018) அதிகாலை ஏவப்படும் என நாசா தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
உலகத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய 'சூரிய புயல்' அல்லது சூரிய பருவநிலை தொடர்பான புதிய தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பக் கூடிய இந்த பார்க்கர் சோலார் புரோப், சூரிய பரப்பின் 64 லட்சம் கி.மீ பகுதியில் சுற்றும் என்றும், சுமார் 1,400 செல்சியஸ் (2,500 பாரன்ஹீட்) வெப்பம் மற்றும் மிகப்பெரிய கதிரியக்கத்தையும் தாங்கி ஆய்வு மேற்கொள்ளும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. சூரியனின் வெப்பம் மிகுந்த கரோனா பகுதியில் பார்க்கர் சோலார் புரோப் பயணித்து ஆய்வு செய்ய இருக்கிறது.
இந்த செயற்கைகோள் அதீத தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் வகையில் சுமார் 11.4 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் உள்ள கார்பன் காம்போசிட்டால் ஆன கவசத்தைக் கொண்டது. மணிக்கு 7,25,000 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடிய திறன்கொண்ட பார்க்கர் சோலார் புரோப், 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என நாசா கூறியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கெனவரெல் என்ற இடத்திலிருந்து டெல்டா 4 ஹெவி ராக்கெட்டில்(Delta IV Heavy rocket ) மூலம் விண்ணிற்கு அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது