அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

காற்றில் இயங்கும் கார்!எகிப்து மாணவர்கள் அசத்தல்.!

உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை எதிர்த்து போராடும் வகையில், சுத்தமான ஆற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், எகிப்தை சேர்ந்த மாணவர் குழு ஒன்று எரிபொருள் ஏதும் இன்றி வெறும் காற்றில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்து அசத்தியுள்ளனர்.
இந்த இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் ஹெல்வான் பல்கலைக்கழகத்தின் கடைசி ஆண்டு ப்ராஜெக்ட்டின் ஒரு பகுதியாக இந்த வாகனத்தை வடிவமைத்துள்ளனர். மேலும் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜனில்(Compressed oxygen) இயங்கும் ஒரு நபர் வாகனத்தின் மாதிரி வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளனர்.
12மில்லியன் டாலர்
2016ல் துவங்கப்பட்ட 3ஆண்டுகால 12மில்லியன் டாலர்(சுமார் ரூ82,300 கோடி) ஐ.எம்.எப் கடன் திட்டத்துடன் இணைந்த காரணிகள், ஆற்றலுக்கான(எரிபொருள்) மானியங்களை குறைத்தல் உள்ளிட்ட கடினமான பொருளாதார மறுசீரமைப்புகளை எகிப்து செய்துவரும் நிலையில், இந்த 'கோ-கார்ட்' வாகனம் அதற்கு ஊக்கமளிக்கும் வகையில் உந்துசக்தியாக உள்ளது.

30 கிலோமீட்டர்
இந்த வாகனம் மணிக்கு 40கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் எனவும், மீண்டும் எரிபொருள் நிரப்பும் தேவை ஏற்படும் வரை 30 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும், இதனை கட்டமைக்க வெறும் 1008 டாலர்(ரூ70,000) மட்டுமே தேவைப்படுவதாகவும் அம்மாணவர்கள் கூறுகின்றனர்.

பணம் செலுத்த தேவையில்லை
"இந்த வாகனம் செயல்படுவதற்கு ஏற்படும் செலவு என்பது ஒன்றுமே கிடையாது. இதற்காக நீங்கள் அழுத்தப்பட்ட காற்றை மட்டுமே பயன்படுத்துவீர்கள். எனவே எரிபொருளுக்காக நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை மற்றும் எரிபொருள் விலையை நினைத்து கவலையால் ஏற்படும் மருத்துவ செலவுகளும் இல்லை " என வேடிக்கையாக கூறுகிறார் இந்த வாகனத்தை வடிவமைத்த மாணவர்களில் ஒருவரான மக்மூத் யாசர்.

மாணவர்கள்
தற்போது இந்த குழுவானது இத்திட்டத்தினை விரிவுபடுத்தி, பெரிய அளவில் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக நிதி திரட்டுவதை எதிர்நோக்கியுள்ளது. மேலும் இந்த வாகனத்தை அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த வைக்கவும், ஒரு முறை காற்று நிரப்பிய பின்னர் 100 கிலோமீட்டர் இயக்க வைக்க முடியும் என இம் மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Reactions

Post a Comment

0 Comments