அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பபு நடத்த அனுமதி - மாணவர்களுக்கான விதிமுறைகள்

அக்டோபர் 1-ம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் வைத்து வகுப்புகள் எடுக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

உலக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனால், மத்திய அரசு செப்டம்பர் 21 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது.

இந்நிலையில், தமிழக அரசு அக்டோபர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தலமைச்செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் விரும்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

  கோப்பு படம் (Credit : DC)

கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள்

  • 50 சதவீதம் மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரை அடிப்படையில் மட்டும் வகுப்பில் பங்கேற்கலாம்.
  • ஆசிரியர்கள் மாணவர்களை முறையாக வழிநடத்த வேண்டும்.
  • சமூக இடைவெளிக்கான கட்டங்கள் வரையப்பட வேண்டும்.
  • பள்ளியின் முகப்பு வாயிலிலும் மாணவர்கள் உள்ளே வருகையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
  • மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் கூட்டம் கூட அனுமதியில்லை
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தவிர்க்க வேண்டும். அவர்களின் பகுதியில் தளர்வுகள் அறிவித்த பின்பே பள்ளிக்கு வரலாம். அந்த மாணவர்கள் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு பாடங்கள் பற்றி கேட்டறியலாம்.
  • வகுப்பறையில் 6 அடி தூரம் சமூக இடைவெளி கடைபிடிக்கும் படி, இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
  • ஆசிரியர்கள் அறையிலும், சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
  • பள்ளிக்கு வெளியில் மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுக்க விரும்பினால் அங்கும் முறையான சமூக இடைவெளி கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
  • விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், கூட்டம் போன்றவற்றுக்கு தடை நீடிக்கும்.


மேலும், பள்ளிகளை சுத்தப்படுத்தவும், முறையான முகக்கவசம் அனைவரும் அணியவும் உள்ளிட்ட பல விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


Reactions

Post a Comment

0 Comments