அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழகத்தில் 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் தடை விதித்துள்ளது.
விதிகளை பின்பற்றாத நிலையில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதித்து தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினாவில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி போதிய ஆவணங்களை சமர்பிக்காததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

புதுக்கோட்டை அரசு பி.எட் கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 12 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் அரசு பி.எட் கல்லூரியில் 16 ஆசிரியருக்கு பதில் 9 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமயம் அரசு பி.எட் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் என்சிடிஇ விதிப்படி நியமிக்காததால் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடைபிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்கலை கழக இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Reactions

Post a Comment

0 Comments