அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Paramedical Admission Notification 2020 - பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்



 *2020 - 2021 ஆம் கல்வி ஆண்டிற்கான, பி.எஸ்.சி. நர்சிங், பி.ஃபார்ம், பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


*தேர்வுக்குழு செயலாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


*2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி நர்சிங், பி.ஃபார்ம், பி.ஏஎஸ்எல்பி ( செவித்திறன் பேச்சு மற்றும் மொழிக்குறியியல் பட்டப்படிப்பு), பி.பி.டி., பி.எஸ்.சி. ரேடியோ க்ராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியோ பல்மோனரி பெர்பியூசன் டெக்னாலஜி, பி.எஸ்.சி. மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி, பி.எஸ்.சி. டயாலிசிஸ் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ஆப்பரேசன் மற்றும் அனஸ்தீசியா டெக்னாலஜி, பி.எஸ்.சி. கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்.சி. க்ரிடிகல்கேர் டெக்னாலஜி, பி.எஸ்.சி. ரெஸ்பிரேட்டரி தெரபி,, பி.ஓ.டி, பி.ஆப்டம் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


*மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் http://tnhealth.tn.gov.in. மற்றும் www.tnmedicalselection.gov ஆகிய இணையதளத்தில் உள்ள தகவலைப் படித்தபின், விண்ணப்பப் படிவங்களில் கோரப்பட்ட தகவல்களை 01-10-2020 10 மணி முதல் 15-10-2020 5 மணி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


*விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டிற்கான கட்டணம் ரூ.400 ஐ ஆன்லைனிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ”the Secretary, Slection Committee, kilpauk, chennai -10” என்ற பெயரில் சென்னையில் பணமாக மாற்றத்தக்கதாக எடுக்கப்பட்ட கேட்பு வரைவோலை மூலமாக செலுத்தலாம் என்றும், பட்டியலினத்தவர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


*அத்துடன், மேலே குறிப்பிட்ட இணையதளங்களில் சேர்க்கை மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் புதிய நிகழ்வு விவரங்களை சேர்க்கை முடியும் வரை அவ்வபொழுது கட்டாயமாக பார்த்து அறிந்துகொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது


*இந்த அறிவிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், 9884224648, 9884224649, 9884224745, 9884224746 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Paramedical Admission Notification 2020 - Full Details & Prospectus - Download here

Reactions

Post a Comment

0 Comments