அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் வகுப்புகளும் எடுக்கப்படுகிறது. இந்நிலையில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனைக்கு பின்னர் முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போது தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சங்கத் தலைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழக அரசின் சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் திட்டமிடலின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் உற்சாகமாக வருகை புரிகின்றனர். தனியார் பள்ளிகளில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் 100% முழுமையாக செயல்படுத்தப்படுவதன் காரணமாக யாருக்கும் இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனை பின்பற்றி 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்து ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்த அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் – அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு!!

மேலும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்துடன் ஒப்பிடுகையில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்ட குறைப்பு இல்லை. எனவே கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பாடத்திட்டத்துடன் ஒப்பிட்டு பாடத்திட்டங்களை அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பல மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் பள்ளி வாகன வரி மற்றும் உள்ளாட்சி வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments