அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பள்ளி வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 மாத்திரைகள் - தமிழக அரசு அறிவிப்பு

பள்ளி வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 மாத்திரைகள்

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல் கட்டமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது

மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியுடன் வகுப்பறையில் உட்கார வேண்டும் என்றும் தமிழக அரசு நெறிமுறைகள் ஆக நேற்று அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி மாணவர்களை பள்ளிக்கு வரும் வரை வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் அல்லது ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது

இந்த நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தலா 10 மல்டிவிட்டமின் மாத்திரை மற்றும் 10 ஜிங்க் மாத்திரை வழங்கவும் அதை மாவட்டங்களில் உள்ள வேர்ஹவுசில் இருந்து பெற்று பள்ளிகளுக்கு வினியோகம் செய்யவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவால் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளும் 10 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments