அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

அரசுப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விரைவில் நியமனம்!!

அரசுப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு – விரைவில் நியமனம்!!

ஆசிரியர் நியமனம்:

2021-2022 கல்வி ஆண்டிற்கான அரசுப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

 

பள்ளிகளில் ஏற்படும் உத்தேச காலி இடங்களின் எண்ணிக்கையை இணை இயக்குனரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தபடுகின்றனர்.

தமிழக அரசு ஆண்டுதோறும் பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் காலியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தேர்வு செய்யும். அந்த வகையில் 2018-2019 ம் ஆண்டிற்கான காலிப்பணி இடங்களுக்கான முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி சமீபத்தில் தான் முடிந்தது. படிப்படியாக 2019-2020 மற்றும் 2020-2021ம் ஆண்டிற்கான ஆசிரியர்களை நிரப்பும் பணி நடைபெறும்.

நடப்பு கல்வியாண்டில் கொரோனா வைரஸின் பரவலினால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகளால் பல ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து உள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் புதிதாக ஐந்து லட்சத்து பதினெட்டாயிரம் மாணவர்கள் சேர்ந்த்துள்ளனர். இதனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான காலிப்பணி இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் 2021-2022 கல்வியாண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பதவிகளுக்கான காலிப்பணி இடங்களை நிரப்புவதற்கான ஆயத்தப்பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டு வருகின்றனது.

பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை:

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், “2021-2022 கல்வி ஆண்டில் ஏற்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் (கிரேடு-1) காலிப்பணி இடங்களுகளை நிரப்புவதற்கான உத்தேச மதிப்பீட்டை இ-மெயிலில் அனுப்பி வைக்க வேண்டும் மற்றும் அதன் பிரதியை 18ம் தேதி இணை இயக்குனரிடம் நேரில் ஒப்படைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள்திறப்பு – 10 & 12ம் வகுப்புகளுக்கு 40% பாடத்திட்டம் குறைப்பு!!

இதன்மூலம் வரும் கல்வியாண்டிற்கான காலிப்பணி இடங்களின் உத்தேச எண்ணிக்கையும் கேட்கப்பட்டிருப்பதால், ஆசிரியர்களுக்கான காலிப்பணி இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments