அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


கொரோனா பரவல் தொடர்பாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் வரும் ஜனவரி மாதம் 19ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளிகள் அதிகாரிகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆகியோர் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன என்பதை பற்றி பள்ளிக்கல்வித்துறை தகவலாக வெளியிட்டிருக்கிறது.

பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 

பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு 18ஆம் தேதி ஆய்வு செய்வதால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் 19ம் தேதி பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்தனர் அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்கள் ஆசிரியர்கள் பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளை  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

 அனைத்து மாணவர்களும் கட்டாய முகக் கவசம் அணிய வேண்டும், கிருமி நாசினி  பயன்படுத்துதல், குடிநீர்,உணவு   வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1.18ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆசிரியர்கள்  பள்ளிக்கு வருகை தரவேண்டும். (முன்னெச்சரிக்கை நடவடிக்கை )

2. சிறப்பு வகுப்பு & மாலை வகுப்பு நடத்த தேவை இல்லை.

3. பாட ஆசிரியர்களை தவிர்த்து இடைநிலை  மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஒழுக்கத்தைக் கண்காணிக்கவும், உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர் பயன்படுத்துதல் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

4. அனைத்து மாணவர்களும் காலை பள்ளிக்கு வந்தவுடன் பள்ளி நுழைவாயில் மூடப்பட வேண்டும்.

5. பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணத்தைக் கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே அனுமதிக்க கூடாது.

6. மாணவ மாணவிகளுக்கு உடல் நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்துச் செல்ல வேண்டும்.

7.வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை பள்ளி வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும்.

8.இறைவணக்க கூடுகை விளையாட்டுப் பயிற்சி உள்ளிட்ட இதர வகுப்புகள் நடத்த கூடாது.

9. மாணவர்கள் பஸ் பயணத்தை குறைத்துக்கொண்டு சைக்கிளில் வருவதை ஊக்குவிக்க வேண்டும்.

10. பெற்றோர் அழைத்து வந்து விடுவதை ஊக்குவிக்க வேண்டும்.

11.பெற்றோரின் விருப்பக்  கடிதம் மாதிரி படிவம் வழங்கப்படும் அதனை பூர்த்தி செய்து மாணவர்கள் வகுப்பு ஆசிரியரிடம்  சமர்ப்பிக்க வேண்டும்.

12.எந்த ஒரு மாணவரையும் வருகை தர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது 

13. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை  4:15 க்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 4.30 மணிக்கு வகுப்புகள் விடப்படும்.

14. அனைத்து ஆசிரியர்களும் 18ஆம் தேதி முதல் 100% பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.

15. ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் மட்டுமே வழங்கப்பட வேண்டும் .

இவ்வாறு அரசு & அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Reactions

Post a Comment

0 Comments