அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மாணவர்களுக்கு பாடத்திட்ட குறைப்பிற்கான அறிவிப்பு ..! – மாணவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் !!


மாணவர்களுக்கு பாடத்திட்ட குறைப்பிற்கான அறிவிப்பு ..! – மாணவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் !!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பிற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், பள்ளிக்கு வருகை புரிய மாணவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு !!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறே சென்றால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்டும் என்பதனால், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பள்ளிகள் திறக்க வழி செய்யப்பட்டது. இதன் விளைவாக வரும் ஜனவரி 19ம் தேதி முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

பாடத்திட்டங்கள் குறைப்பு ??

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு வருகிறது. அவை 50% வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாளில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களுக்கான வழிமுறைகள் :

தற்போது மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது தங்களின் பெற்றோர்களிடம் இருந்து ஒரு படிவத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு தான் வர வேண்டும் என ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனை பெற்றோர்கள் பூர்த்தி செய்து முழு சம்மதத்துடன் தங்களின் பிள்ளைகளை அனுப்பிட வேண்டும். அந்த படிவத்தினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளாலாம்.

School Students Letter Format 


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments