அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Flash News : Middle School to High School Upgration - School List Published.

IMG_20210119_195401

GO NO : 10 , DATE : 18.01.2021

ஆணை : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் .110 - ன் கீழ் 13.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டது .

 " வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் 26 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் செய்து கொடுப்பதுடன் , தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் 9 கோடியே 87 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். ” மேலும் , இவ்விதியின் கீழ் 20.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . " தற்போது ஏற்கெனவே அறிவித்த 15 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு பதிலாக 50 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும்.


2020-21 ஆம் ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தவும் , தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் 1-5 வகுப்புகளை தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யவும் மற்றும் இப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிலை உயர்த்தவும் / தோற்றுவிக்கவும் ஆணை வழங்குமாறு மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.


பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை நன்கு ஆய்வு செய்து , மாணவ / மாணவியர் நலன் கருதி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் அனுமதித்தல் குறித்து கீழ்க்காணுமாறு அரசு ஆணையிடுகிறது .

2020-21ஆம் ஆண்டில் முதற்கண் இணைப்பில் உள்ள 35 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.


தரம் உயர்த்தப்படும் 35 நடுநிலைப் பள்ளிகளில் , 1-5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுகிறது.

Middle School to High School Upgration - School List.pdf


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments