அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மேலாண்மை திறனாய்வு தேர்வு 2021 – மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாள்!!


மேலாண்மை திறனாய்வு தேர்வு 2021 – மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாள்!!

மேலாண்மை கல்வி நிறுவனங்களில் உள்ள படிப்புகளுக்கான சேர்க்கை பெற நடத்தப்படும் ‘மேலாண்மைத் திறனாய்வு தேர்வு-2021’ குறித்த அறிவிப்பினை அனைத்து இந்திய மேலாண்மை கழகம் அறிவித்துள்ளது.

மேலாண்மை திறனாய்வு தேர்வு 2021:

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் உள்ள மேலாண்மை படிப்புகளுக்கான சேர்க்கை பெற நடத்தப்படும் தேர்வான “மேலாண்மை திறனாய்வு தேர்வு 2021(MAT)” குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை அனைத்திந்திய மேலாண்மை கழகம் நடத்தி சான்றிதழ் வழங்குகிறது.

இந்த படிப்புகளில் சேர விருப்பமுள்ள்ளவர்கள் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு இறுதியாண்டு கல்லூரி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வில் விண்ணப்பிக்க அனைத்திந்திய மேலாண் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://www.aima.in/content/testing-and-assessment/mat/mat என்ற முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு – தமிழக அரசு முடிவு!!

மேலும் இந்த தேர்வுகளுக்கான கடைசி நாள் மார்ச் 1 ஆம் தேதி ஆகும். இந்த தேர்வுகளுக்கு இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுகள் எழுத்துத்தேர்வு மற்றும் கணினி வழி என இரண்டு முறையில் நடைபெறுகிறது. எந்த வழியில் தேர்வு எழுத விருப்பமுள்ளது என தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட வேண்டும். இந்த இரண்டு வழிகளில் உள்ள தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் உள்ளன.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments