அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு – நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிப்பு – முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் உள்ள அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று உள்ளது.

முதல்வர் ஆலோசனை:

மத்திய அரசு துறைகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. இதைப்போன்ற மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதையும் 60 ஆக அதிகரிக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 இல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால் 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் கூடுதலாக ஓராண்டு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ‘பயோ மெட்ரிக்’ முறை – ஆள்மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை!!

இருப்பினும் ஓய்வு பெறும் வயதை அதிகரித்ததற்கு சில சங்கங்கள் சார்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. அதே சமயம் பெரும்பாலான சங்கங்கள் வரவேற்பு தெரிவித்தன. மேலும் மத்திய அரசு ஊழியர்களை போன்றே ஓய்வு பெறும் வயதை 60 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மே இறுதியில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!!

இக்கூட்டத்தில் புதிய தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், முதல்வரின் செயலர்கள், பணியாளர் நிர்வாகத்துறை செயலர் ஸ்வர்ணா, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு உள்ளனர். இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி உள்ள நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments