அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழகத்தில் 9, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!

தமிழகத்தில் 9, 11 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு!!

தமிழகத்தில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அடுத்த ஆண்டு அவர்கள் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் இம்முறை ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு 10 மாதங்களுக்கு பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர்களின் அனுமதியுடன் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் 9,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத உள்ளதால் அவர்களுக்கு பள்ளி இறுதித்தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 80% முதல் 90% மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வருகை புரிவார்கள் என்பதால் வாரிய தேர்வுகள் நடத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் அடிப்படையில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு தேதிகள் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேதிகளுடன் ஒன்றாக இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு மாதிரி வினாக்களும், வினா வங்கியும் வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வில் கடினம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments