அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

'நாட்டா' நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு


gallerye_050340193_2612294

கட்டட அமைப்பியல் படிப்புக்கான, 'நாட்டா' நுழைவுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 


நாட்டா தேர்வு கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு:கட்டட அமைப்பியலுக்கான, பி.ஆர்க்., பட்டப் படிப்பில் சேர விரும்பும், பிளஸ் 2 மாணவர்கள், தேசிய அளவிலான நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நாட்டா தேர்வு, ஏப்ரல், 10 மற்றும் ஜூன், 12ல் நடத்தப்படுகிறது.மாணவர்கள் இரண்டு தேர்விலும் பங்கேற்கலாம். 


எதில் அதிக மதிப்பெண் உள்ளதோ, அந்த மதிப்பெண் மாணவர் சேர்க்கைக்கு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி விபரங்கள், விரைவில் வெளியிடப் படும். மாணவர்கள், www.nata.in, www.coa.gov.inஎன்ற, இணையதளங்களில் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments