அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பத்தாம் வகுப்பு மாணவன் உலக சாதனை

*உலக சாதனை நிகழ்வு* 



டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, ஸ்பேஸ் சோன் இந்தியா ஆகியோர் இணைந்து இராமேஸ்வரத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி பள்ளி மாணவர்கள் தயாரித்த 100 மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

 இந்த உலக சாதனை நிகழ்வில் *முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் செய்யது அகமது சமீர் என்ற மாணவன்* தயாரித்த செயற்கை கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கை கோள்கள் உதவியுடன் பூமியின் தட்ப வெட்ப நிலை, கதிர்வீச்சு, ஓசோன் படலம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

அம்மாணவனுக்கு *கின்னஸ் உலக சாதனை, வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டு, ஆசியா புக் ஆப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்டு, அசிஸ்ட் புக் ஆப் ரெக்கார்டு* என  ஐந்து  உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

உலக சாதனை புரிந்த மாணவனை முகம்மதியா பள்ளிகளின் தாளாளர், முகம்மதியா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments