அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையத்தில் வெளியீடு!!

 

images%2528146%2529

பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வி நிறுவனம் மூலமாக பல்கலை தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வு முடிவுகள் வெளியீடு: சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலை தொலைநிலைக் கல்வி நிறுவனம் பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது. 1997 ஆம் ஆண்டு தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் தொடக்கத்தில் வணிகவியல், புவி அமைப்பியல், கணிதம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டு வந்தன. தற்போது அதில் 20க்கு மேற்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்புகள் உள்ளன.

இந்நிலையில் பல்கலைக்கழக தொழிற்சார் புரிந்துணர்வு திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன. இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020 ஆம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா காரணமாக இந்த முடிவுகள் வெளியிட காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிரிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை எழுதி காத்திருக்கும் மாணவ, மாணவிகள் முடிவுகளை www.periyaruniversity.ac.in  என்ற பல்கலைக்கழக இணையத்தில் காணலாம்,” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments