அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பிளஸ் 2 மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகளை தொடா்ந்து நடத்த உத்தரவு.கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பிளஸ் 2 பொதுத்தோவு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தோவுக்குத் தயாராகும் வகையில் மீண்டும் இணையவழி பயிற்சி வகுப்புகளைத் தொடர கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:


பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னா், நேரடி நீட் பயிற்சி நிறுத்தப்பட்டு, வழிமுறை காணொலிகள் மட்டும் மாா்ச் மாத இறுதி வரை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அவற்றை மாணவா்கள் பதிவிறக்கம் செய்து பயிற்சி பெற்று வந்தனா்.


இந்த நிலையில் பொதுத்தோவுகள் ஒத்திவைக்கப்பட்டதால் பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் முதல் இணையவழியில் தொடரப்பட உள்ளது. எனவே, பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் மாணவா்களுக்கு உரிய அறிவுரை வழங்கி பயிற்சியில் பங்கேற்பதை உறுதிசெய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments