அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

என்னது ? 9&10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அதிர்ச்சியில் மாணவர்கள்


தமிழகத்தில், 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 அலை பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம், மகராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பாதிப்பை கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பு ஊசி நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும், நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

ஆனால் கொரோனா தொற்று அதிகரித்தாலும், திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு வருகிற மே 3ம் தேதி நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


அதுமட்டுமல்லாது பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு, செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கும் பணியையும் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செய்து வருகிறது.

இந்தநிலையில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

ஏற்கனவே இவ்விரு வகுப்புகளுக்கும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களது திறனை அறிந்துகொள்ளவே இந்த திறனறி தேர்வினை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் திறனறிவுத் தேர்வில் சரியாக விடை அளிக்காவிட்டால் தேர்ச்சி கிடையாது என்பது பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments