அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

BREAKING : புதிய முதல்வரின் முதல் 5 கையெழுத்துகள் – தேர்தல் வாக்குறுதிகள் அமல்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 இடங்களை கைப்பற்றி அபாரமாக தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளது. 

இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் பல வாக்குறுதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் முதல்வராக பதவியேற்றதும் இன்று முதன்முதலாக தலைமைச் செயலகத்துக்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.


முதல் கோப்பாக கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கும் திட்டத்தில் கையெழுதித்திட்டுள்ளார்.

இரண்டாவது கோப்பாக ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 குறைப்பு மே 16ஆம் தேதி முதல் அமல்.

3வது கோப்பாக தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.4வது கோப்பாக மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணியாளர் பொறுப்பு என அறிவிப்பு .

5வது கோப்பாக தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும்*

Reactions

Post a Comment

0 Comments