அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தளர்வுகள் இல்லாத 11 மாவட்டங்களில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6ம் வகுப்பு 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பாடபுத்தகம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.





பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு மாணவர் சேர்கை தொடங்கி உள்ளது; 27 மாவட்டங்களில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் விதிமுறைகளை மாணவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்; தளர்வில்லாத 11 மாவட்டங்களில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை இல்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மார்க் இருக்காது. மாணவர்கள் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் .ஒரு வாரத்திற்குள் புத்தகங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் . மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்துவது பற்றி இப்போதைக்கு யோசிக்கவில்லை. ஆன்லைன் கல்வி , கல்வி தொலைக்காட்சி வழியாகவே பாடம் நடத்துவது தொடர்ந்து நடைபெறும் ” என்று கூறினார்.



Reactions

Post a Comment

0 Comments