அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல், மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? இன்று முக்கிய முடிவு!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடல், மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? இன்று முக்கிய முடிவு!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மற்றும் ஓமைக்ரான் மாறுபாடு அடைந்த தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து இன்று தமிழக முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் அறிவித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள்:

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் பரவல் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளி, கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் தமிழகத்தை தாக்க தொடங்கியது. இதனால், 2021 மே மாதம் முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதால் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்று பலரும் மீண்டும் நேரடி வகுப்புகளை ஆரம்பிக்க கோரிக்கை வைத்து வந்தனர்.

தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விளைவினால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனால் முதல் கட்டமாக செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதன் முடிவுகளின் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பித்த தொடக்க நாட்களில் அவர்களுக்கு அடைப்படை கல்வி பற்றிய நினைவூட்டல் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக சுகாதாரத்துறை செயலர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை படுகைகளை குறித்து நேரில் ஓய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டையில் அதிக அளவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் திருமணம் போன்ற நிகழ்வுகளில் மக்கள் கூட கட்டுப்பாடு, மீண்டும் பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக இன்று முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments