அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.02.22

திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: நட்பு

குறள் எண் : 788

குறள்:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

பொருள்:
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.

பழமொழி :


Better to bend than to break.

உடைந்து போவதை விட வளைந்து கொடுப்பது நல்லது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும் எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன். 

2. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர் எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

இந்த உலகமே உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், நீ யாரையும் திரும்பிப் பார்க்காதே - ஹிட்லர்

பொது அறிவு :

1. வேர்க்கடலை வளர ஏற்ற மண் எது? 

செம்மண்.

 2. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 

இந்தியா.

English words & meanings :

Indolent - very lazy, மிகவும் சோம்பலான, 

terrified - afraid, அதிகம் பயந்து விடுதல்

ஆரோக்ய வாழ்வு :

கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. கொய்யாப்பழம் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு ரத்த உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. ரத்தசோகை நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நல்ல குணம் தெரியும்.



கணினி யுகம் :

Upside - down exclamation point - ctrl + alt + shift +! 

Upside - down question mark - ctrl + alt + shift +?

நீதிக்கதை

மீனவனின் புத்திசாலித்தனம்

மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன் அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும் என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா? அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல என்று மன்னர் மறுத்தார். சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள்.

எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை திரும்ப பெற்றே ஆக வேண்டும் என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்வி கணையை மகாராணி தொடுத்தாள். அவன் உஷாராக பதில் சொன்னான் இது ஆணுமில்லை, பெண்ணுமில்லை இரண்டின் குணங்களையும் கொண்ட அதிசய மீன். அதனால் தான் அதை மன்னருக்கு கொண்டு வந்தேன் என்றான். இந்த பதிலால் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். அதிலிருந்து ஒரு காசு தரையில் விழுந்து ஓடியது. மீனவன் அதை தேடி எடுத்தான். மகாராணி கோபத்தின் உச்சிக்கே போனாள்.

பேராசைக்காரன், கீழே விழுந்த காசை யாராவது வேலைக்காரர்கள் எடுத்து போகட்டுமே என்று விடவில்லை பாருங்கள் என்றாள் மன்னரிடம். அவன் நிதானமாக திரும்பிச் சொன்னான். நான் பேராசையில் அதை எடுக்கவில்லை மகாராணி! அந்த நாணயத்தில் மன்னரின் உருவம் இருக்கிறது. யாராவது தெரியாமல் அதை மிதித்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் இன்னும் நெகிழ்ந்த மன்னர் மேலும் ஐந்தாயிரம் பொற்காசுகளை கொடுத்தார். 

நீதி : யாரிடம் எப்போது எப்படிப் பேச வேண்டும் என்று தெரிந்திருப்பவர்களே வெற்றியடைகிறார்கள்.

இன்றைய செய்திகள்

14.02.22

★தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகளை இன்று தொடங்கவேண்டும் என்றும் அரசு பள்ளி மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) உத்தரவிட்டுள்ளது.

★வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

★புவி கண்காணிப்புக்கான ‘இஓஎஸ்-04’ செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி -சி52 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

★இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம்: சிங்கப்பூர் விமான கண்காட்சியில் பங்கேற்கிறது.

★வடக்கு ஒளி என்றும் துருவ ஒளி என்றும் அழைக்கப்படும்  ‘சுவீடன் அரோரா’ என்னும் அற்புத வானியல் நிகழ்வு சுவீடன்-பின்லாந்து நாடுகளுக்கு இடையேயான எல்லையில் உள்ள பஜாலா பகுதியில் தோன்றியது. அப்போது வானம் பச்சை நிறமாக மாறியது.

★உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு உத்தரவு.

★பிபா கிளப் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி; செல்சியா அணி மகுடம் சூடியது.

★பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்; ரஷிய அணி தங்கம் வென்றது.


Today's Headlines

★ The Directorate of Medical Education (DME) has ordered that first-year classes for MBBS and BDS courses in Tamil Nadu should start today and no fees should be charged to government school students.

 ★ The Chennai Meteorological Department has forecast heavy rains in Kumari, Nellai, Tenkasi, Virudhunagar, and Theni districts due to atmospheric circulation in the lower layer. 
.

 ★ The Earth observation satellite 'EOS-04' is to be launched today by the PSLV-C52 rocket.

 ★ Tejas aircraft made in India: Participates in the Singapore Air Show.

 ★ The amazing astronomical phenomenon ‘Sweden Aurora’ also known as Northern Light and Polar Light appeared in the Pajala region on the border between Sweden and Finland.  Then the sky turned green.

 ★ Various countries order their countrymen to leave Ukraine immediately.

 ★ FIFA Club Football World Cup Final;  Chelsea crowned


 ★ Beijing Winter Olympics;  The Russian team won gold.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments