அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10ம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமா? Question Analysis

*10ஆம் வகுப்பு*
*கணித வினாத்தாள்*

😱 மாணவர்களின் மன நிலைமையையும், பாடத்தின் தன்மையையும் கருத்தில் கொள்ளாமல் *மிகச் சிறப்பாக* வினாத்தாள் தயாரித்த ஆசிரிய பெருமகனாருக்கு *வாழ்த்துக்கள்*

😭 மெல்ல கற்போருக்கான எளிமையான பாடங்கள் என அலகு 1, 2 மற்றும் 8-ஐ தேர்ந்தெடுத்து, வருடம் முழுவதும் பயிற்சி அளித்திருந்த நிலையில்.. தற்போது அதிலிருந்து கேட்கப்பட்ட நான்கு 5 மதிப்பெண் வினாக்களும் *உயர்தரத்தில்* அமைந்ததால் வினாத்தாளின் கடினத்தன்மை அதிகமானது; மாணவர்களின் தேர்ச்சியும் கேள்விக்குறியானது.

🙄 மூன்று ஒரு மதிப்பெண் வினாக்கள் Created Questions ஆக கேட்கப்பட்டிருந்தது. அவையாவன..
1) Qn.No. 3 - (PC pg.no.57)
2) Qn.No.10 - (Oldbook. Ex.5.6-10)
3) Qn.No.13 - (TC pg.no.283

🙄 அதேபோல் இரண்டு மதிப்பெண் வினா எண்-28 (Oldbook. Ex.3.11-qn.no.4) மற்றும் ஐந்து மதிப்பெண் வினா எண்-42 (Oldbook. Ex.5.4-qn.no.18) ஆகியவையும் Created question ஆகும்.

😭  வழக்கமான வினா அமைப்பை விட, Created வினாக்கள் குறைவாகவே உள்ளது. ஆனாலும், அனைத்து வினாக்களும் ஒவ்வொரு பாடத்திலும் உள்ள மிகக் கடினமான வினாக்களாகத் தேடிக் கண்டுபிடித்துடுத்து வைத்திருப்பதால் வினாத்தாள் மிகக் கடினமாக அமைந்தது.

😳 தமிழ், ஆங்கில பாடங்களில் அமைந்தது போல.. திருப்புதல் தேர்வில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. முதல் திருப்புதல் தேர்வில் இருந்து ஒரு கேள்வியும் (Qn.No.41) இரண்டாம் திருப்புதல் தேர்வில் இருந்து இரண்டு கேள்விகள் (Qn.No.38, 42) மட்டுமே இடம் பெற்றுள்ளது.

🤔 ஆறுதலாக.. அரசு மாதிரி வினாத்தாள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட *Expected Questions - I & II* materialல் இடம் பெற்ற..
இரண்டு மதிப்பெண் வினாக்கள் ஐந்தும் (Qn.No: 20, 21, 24, 25, 26)   ஐந்து மதிப்பெண் வினாக்கள் ஐந்தும் (Qn.No: 29, 34, 35, 38, 41) கேட்கப்பட்டு இருந்தது.

😒 *வினா எண் 41க்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்*

2020-21 வருடம் குறைக்கப்பட்ட பாடப்பகுதி அறிவிக்கப்பட்ட போதே இந்தப் பாடப் பகுதியில் குழப்பம்  இருந்தது.

அப்போதே.. 
L.O.: 8.5-ஐ (Algebra of events) நீக்க வேண்டும் அல்லது L.O.: 8.6- ஐ (Addition theorem) சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

அதே குறைக்கப்பட்ட பாடப்பகுதி இந்த வருடமும் தொடர்ந்த போதும் கடிதம் எழுதப்பட்டது. ஆனாலும் பயனில்லை; 

இப்பொழுது அந்த குழப்பமான பாடப்பகுதியில் இருந்து கேள்வி கேட்கப்பட்டு உள்ளதால்.. அதற்கு கருணை மதிப்பெண்(Grace mark) வழங்க வேண்டும்.

😢 அதேபோல பெரும்பாலான இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் மிக மிகக் கடினமான பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருப்பதால்.. அதாவது, ஏறத்தாழ 60 சதவீத வினாக்கள் சராசரி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதால்.. அனைவருக்கும் பொதுவான *கருணை மதிப்பெண்ணாக  குறைந்த பட்சம் ஐந்து மதிப்பெண்கள்* வழங்குவது பொருத்தமாக இருக்கும். 

👍👍 தனிமனித முயற்சிகள்.. செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கிறது.

Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments