அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வின் தற்காலிக விடைக்குறிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு திட்டமிட்டப்படி நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வுக்கான Answer Key எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்த வண்ணம் காத்துக் கொண்டுள்ளனர். தற்போது அது குறித்த அறிவிப்பை பற்றி தேர்வாணையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.



தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வு மூலமாக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த பிறகு TNPSC தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதன்படி குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இத்தேர்வு மூலமாக சுமார் 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டது.

முதல்நிலை தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். TNPSC அறிவித்தபடி குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்து முடிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்வில் சுமார் 1.83 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதையடுத்து தேர்வுக்கான Answer Key எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் Answer Key தொடர்பான அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியதாவது, குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இன்னும் 5 நாட்களில் TNPSC தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்களின் ஆட்சேபனைகளை வழங்க தேர்வாணையம் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குரூப் 2 தேர்வில் எந்த வினாவும் தவறானதாக கேட்கப்படவில்லை என்றும் மொழிபெயர்க்கும் போது ஆப்ஷன்களில் எதுவும் தவறாக கொடுக்கப்படவில்லை என்றும் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது.


Join Telegram Group Link -Click Here


Reactions

Post a Comment

0 Comments