அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!

Temporary Teacher Recruitment
Temporary Teacher Recruitment

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகள் உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு, தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாளான ஜுலை 4-ஆம் தேதி முதல் வரும் ஜுலை 6 ஆம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1331 பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்களே நியமனம் செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது நினைவுக்கூறத்தக்கது.

இந்நிலையில் தற்போது தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு,

  • ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை கொடுத்துத் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரியவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் நியமிக்கலாம்.
  • பள்ளிக்கு அருகே மாவட்டத்திற்கு வசிக்கும் நபர்களுக்கு முன்னரிமை அளித்து ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

வரைமுறை எனப் பார்க்கும்போதுஇ கீழ்வருவன அமைகின்றன.

  • இடைநிலை ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 1 ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 2 -வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2020ல் வெளியான அரசாணையின் படி தகுதி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாளான ஜுலை 4-ஆம் தேதி முதல் ஜுலை 6 ஆம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார். அதோடு, தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி அளிக்காவிடில் அவர்கள் உடனே பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்குத் தேர்வுக்கான விண்ணப்பத்தாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனைப் பரிசோதிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்

Reactions

Post a Comment

0 Comments