பாரதிதாசன் பாடல் வரிகள்...................
தமிழுக்கும் அமுதென்று பேர்
- அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர் -
இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின்
விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர் -
இன்பத்
தமிழுக்கு மதுவென்று பேர் -
இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம்
பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்கு பால்
- இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க
புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு
வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச்
சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத்
தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு
வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத்
தாய் -இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
0 Comments
குறிப்பு
1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்: கல்வி அமுது