அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

வான் தொட்ட யூரி காகரின்

யூரி ககாரின் (Yuri Gagarin) ரஷ்யா நாட்டுச் சிறுவன். ரஷ்ய மொழியில் ககாரின் என்றால், காட்டு வாத்து என்றொரு அர்த்தம் உண்டு. ஆனால், பிற்காலத்தில் ‘வான் கழுகு’ எனத் தான் போற்றப்படுவோம் என்பது அந்தச் சிறுவனுக்குத் தெரியாது.
ககாரின் அப்பாவுக்கு, தச்சு வேலை. உலகப் போர் சமயத்தில், ககாரினுடைய ஊர் முழுக்க ஹிட்லரின் படையால் துவம்சம் ஆனது. அப்பா, ராணுவத்துக்குச் சென்றார். ஊரே பயத்தில் இருக்க, குட்டிப் பையன் ககாரினோ, பறக்கும் பலவகை விமானங்களைப் பார்த்து, கண்கள் விரியச் சிரித்தான். ”நானும் இதைப்போல பறக்க வேண்டும்” என்று அம்மாவிடம் சொன்னான்.
அந்தச் சமயத்தில், பக்கத்து ஊரில் நடந்த விமான சாகசக் கண்காட்சியைக் கண்டான். அம்மாவிடம் அடம்பிடித்து, ஏரோ கிளப்பில் சேர்ந்தான். காற்றில் மிதந்தபோது, ”இதுதான் நம் வாழ்க்கை” என முடிவு செய்துகொண்டான்.
அரசாங்க விமானப் பயிற்சியில் சேர்ந்து, சிறப்பாகத் தேர்வுபெற்று, துடிப்பான இளைஞனாக மாறினார், யூரி ககாரின். ரஷ்யாவும் அமெரிக்காவும் ‘நீயா… நானா?’ எனப் பல முனைகளில் மோதிக்கொண்டிருந்தன. அதில் ஒன்று, விண்வெளிக்கு யார் முதலில் மனிதனை அனுப்பி சாதிப்பது என்பது.
ரஷ்யாவின் முயற்சியில் ககாரின், விண்வெளிக்கு முதல் மனிதராகப் பயணம் போனார்.  ஏப்ரல் 12, 1961-ல் வாஸ்டோக் 1 என்ற விண்கலத்தில் பயணம்செய்து, விண்வெளியில் நடந்தார். 108 நிமிடங்கள் நீடித்த அந்தச் சாகசம், ககாரினை உலக ஹீரோ ஆக்கியது. ரஷ்ய நாடு முழுக்க பல தெருக்களுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது. பிறகு, எண்ணற்ற பைலட்களுக்கு விண்கலப் பயணத்துக்கான பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்.
இவரது 34 வயதில் அந்தத் துயரம் நடந்தது. 1968 மார்ச் 27-ல் நடந்த ஒரு விமான விபத்தில், யூரி ககாரின் மரணமடைந்தார்.‘Under the wide and starry sky; Dig the grave and let me lie’ எனும் ஸ்டீவன்சன் வரிகள், இவருக்கு அஞ்சலியாக ஒலித்திருக்கும் வான்வெளியில்!
Reactions

Post a Comment

0 Comments