அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

நியூட்ரான் நட்சத்திரம் என்பது என்ன?

நிலவற்ற நாளில் இரவில் வானத்தைப் பார்த்தால் ஏராளமானநட்சத்திரங்கள் தெரிகின்றனஎல்லாமே ஒளிப்புள்ளிகளாகத்தெரிகின்றனஉற்றுக் கவனித்தால் சில நட்சத்திரங்கள் நல்ல நீலநிறத்தில் இருக்கின்றனவெண்மையான நட்சத்திரங்களும்உண்டுஇங்குமங்குமாக சிவந்த நட்சத்திரங்கள்காணப்படுகின்றன.

அஸ்ட்ரானமி எனப்படும் வானவியல் துறையைச் சேர்ந்தநிபுணர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு அவற்றின் நிறத்தைவைத்தும் அதன் பருமனை வைத்தும் விதவிதமான பெயர்களைவைத்திருக்கிறார்கள்.
செம்பூதம்இது ஒரு வகை நட்சத்திரத்தின் பெயர்சிவப்பாகஇருக்கும்வடிவில் மிகவும் பெரியது.   திருவாதிரை(Beteguese) நட்சத்திரம் மற்றும் கேட்டை(Antares) நட்சத்திரம் இந்தவகையைச் சேர்ந்தவைஇந்த இரண்டுமே சூரியனை விடப் பலமடங்கு பெரியவை

வெள்ளைக் குள்ளன்(White Dwarf)இது வேறு வகை நட்சத்திரத்தின்பெயர்வெண்மையாக இருக்கும்.வடிவில் சிறியதுசிவப்புக்குள்ளன்(Red Dwarf) என்ற பெயரைத் தாங்கிய நட்சத்திரங்களும்உண்டுநியூட்ரான்(Neutron Star) நட்சத்திரம் இவற்றிலிருந்துவேறுபட்டதுஅதற்கு நிறம் கிடையாதுசொல்லப்போனால் அதைவெறும் கண்ணால் பார்க்க முடியாதுஅது அருவ நட்சத்திரம்.

சாதாரண நட்சத்திரத்துக்கும் நியூட்ரான் நட்சத்திரத்துக்கும் என்னவித்தியாசம்.? சாதாரண நட்சத்திரம் பஞ்சு மிட்டாய் என்றால்நியூட்ரான் நட்சத்திரம் கமார்கட் போன்றதுசாதாரணநட்சத்திரத்தை பசக் என்று அமுக்க முடிந்தால் அது நியூட்ரான்நட்சத்திரமாகி விடலாம்.

இது பற்றி  மேலும் விளக்குவதற்கு முன்னால் நாம் பழையகதைக்குப் போக வேண்டும்இங்கிலாந்தில் 1897 ஆம் ஆண்டில்தாம்சன் என்ற ஆராய்ச்சியாளர் எலக்ட்ரான் என்னும் நுண்ணியதுகள் இருக்கிறது என்று கண்டுபிடித்தார்இதற்காக அவருக்குப்பின்னர் நோபல் பரிசு வ்ழங்கப்பட்டதுஉலகில் இன்றுகம்ப்யூட்டர் உட்பட நூறாயிரம் எலக்ட்ரானிக் க்ருவிகள் அதாவதுமின்னணுக் கருவிகள் இருக்கின்றனஇவற்றுக்கு எலக்ட்ரான்களேஅடிப்படை.

தாம்சன் தமது கண்டுபிடிப்பைச் செய்த அதே காலகட்டத்தில்நியூசீலந்து நாட்டிலிருந்து ரூதர்போர்ட் என்ற இளைஞர் மேல்படிப்புக்காக  இங்கிலாந்து வந்து சேர்ந்தார்அவர் தாம்சனிடம்சிஷ்யனாகச் சேர்ந்தார்அணுவைப் பற்றி ஆராய்ச்சி பண்ணுமாறுரூதர்போர்டிடம் தாம்சன் கூறினார்.

அணுவைப் பற்றி அனேகமாக எதுவுமே அறியப்படாத காலம்அதுரூதர்போர்ட் தமது ஆராய்ச்சியில் அணுவின் அமைப்புஎப்படிப்பட்டது என்பதைக் கண்டுபிடித்தார்அதற்கு அவர்பயன்படுத்திய சிறிய கருவிகளை சின்ன அட்டைப் பெட்டியில்போட்டு மூடி விடலாம்.
 அணுவின் மையத்தில் அணுவை விடச் சிறியதான புரோட்டான்என்ற துகள் இருப்பதாக 1911 ஆம் ஆண்டில் ரூதர்போர்ட்கண்டுபிடித்தார்

பின்னர் 1932 ஆம் ஆண்டில் சாட்விக் என்ற விஞ்ஞானிஅணுவுக்குள் புரோட்டானுடன் நியூட்ரான் என்ற துகளும்இருப்பதாகக் கண்டுபிடித்தார்இந்த கண்டுபிடிப்புகளைத்தொடர்ந்து அணு என்பது உடைக்க முடியாத நுண்ணியஉருண்டை அல்ல என்பது தெளிவாகியதுஅதாவது அணுவின்நடு மையத்தில் புரோட்டானும் நியூட்ரானும் சேர்ந்துஇருக்கின்றன என்பதும் இவற்றை எலக்ட்ரான்கள் சுற்றிச் சுற்றிவருகின்றன என்பதும் தெரியவந்ததுரூதர்போர்ட்சாட்விக்இரண்டு பேருமே பின்னர் நோபல் பரிசு பெற்றனர்.

எல்லா அணுக்களிலும் புரோட்டான் எண்ணிக்கை அல்லதுநியூட்ரான் எண்ணிக்கை ஒரே மாதிரி இருப்பது கிடையாது.ஹைட்ரஜன் அணுவின் உள்ளே பெரும்பாலும் ஒரே ஒருபுரோட்டான் மட்டுமே இருக்கும்அபூர்வமாக சில ஹைட்ரஜன்அணுக்களில் புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் இருக்கும்.

அணுக்களிலேயே மிக சிம்பிளான அணு ஹைட்ரஜன் அணுவே.இத்துடன் ஒப்பிட்டால் கார்பன் அணுவின் உள்ளே ஆறுபுரோட்டான்களும் ஆறு நியூட்ரான்களும் இருக்கும்அவற்றைஆறு எலக்ட்ரான்கள் சுற்றிக் கொண்டிருக்கும்.
கார்பன் அணு
இத்துடன் ஒப்பிட்டால் தங்க அணு ஒன்றில் 79 புரோட்டான்களும்118 நியூட்ரான்களும் இருக்கும். 79 எலக்ட்ரான்களும் இருக்கும்.இரும்பு அணுநிக்கல் அணுதாமிர அணு போன்ற வேறு வகைஅணுக்களில் இவற்றின் எண்ணிக்கை வேறு விதமாக இருக்கும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அணுவாக இருந்தாலும்அதில் நிறைய காலியிடம் உண்டுரூதர்போர்ட் ஆரம்பத்தில்நடத்திய பரிசோதனைகளிலேயே இது தெரிய வந்தது.

உதாரணமாக கார்பன் அணு ஒன்று பெரிய கால்பந்து ஸ்டேடியம்அளவுக்குப் பெரிதாக இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம்.அந்த ஸ்டேடியத்தின் நடுமையத்தில் ஆறு புரோட்டான்களும்ஆறு நியூட்ரான்களும் நெருக்கியடித்துக் கொண்டு நட்ட நடுவேஇருக்கும்இந்த இரண்டும் சேர்ந்து கால்பந்து சைஸில்இருப்பதாக வைத்துக் கொண்டால் ஆறு எலக்ட்ரான்களும்ஸ்டேடியத்தின் பவுண்டரியில் இருக்கும்.

நடுவே வைக்கப்பட்ட கால்பந்துக்கும் ஸ்டேடியத்தின்பவுண்டரிக்கும் நிறைய காலியிடம் இருக்கிற மாதிரியில் கார்பன்அணுவில் நிறையக் காலியிடம் இருக்கும்எல்லா அணுக்களிலும்இப்படிக் காலியிடம் உண்டு.

இப்போது நாம் மறுபடி வானத்து நட்சத்திரத்துக்கு வருவோம்.அண்டவெளியில் பல  கோடி கிலோ மீட்டர் நீள அகலம்கொண்டதாக ஹைட்ரஜன் வாயுக் கூட்டம் ஒரு மொத்தை போலஅல்லது மேகக் கூட்டம் போல பரவி அமைந்திருக்கும்அந்தமேகக்கூட்டத்தில் 90 சதவிகிதத்துக்கு மேல் ஹைட்ரஜன் வாயுஇருக்கும்எங்கோ ஏதோ ஒரு நட்சத்திரம் வெடித்தது என்றால்அதனால் ஏற்படும் அதிர்ச்சி அலை அண்டவெளியில் பரவும்.

அந்த அதிர்ச்சி அலையின் விளைவாக ஹைட்ரஜன் வாயுஅடங்கிய மேகக் கூட்டம் மெல்லச் சுழல் ஆரம்பிக்கும்பிறகுஅது சற்றே வேகமாகச் சுழலும்இவ்விதம் சுழலச் சுழல அதுஉருண்டை வடிவம் பெறும்அதன் வடிவம் சுருங்க ஆரம்பிக்கும்.அவ்விதம் சுருங்கச் சுருங்க சுழற்சி வேகம் அதிகரிக்கும்அடர்த்திஅதிகரிக்கும்.

அடர்த்தி அதிகரிக்கும் போது வெளிப்புறத்திலிருந்து மையம்நோக்கி அமுக்கம் அதிகரிக்கும்இதன் விளைவாக அந்தஹைட்ரஜன் வாயு உருண்டையின் மையத்தில் வெப்பம்அதிகரிக்கும்வெப்பம் பல மிலியன் டிகிரியை எட்டும் போதுஹைட்ரஜன் அணுக்களின் எலக்ட்ரான்கள் பிய்த்துக் கொண்டுபறக்கும்அந்த நிலையில் ஹைட்ரஜன் அணுக்களின்புரோட்டான்கள் மட்டும் தனியே அலைபாயும்ஒரு கட்டத்தில்இந்த புரோட்டான்கள் ஒன்றோடு ஒன்று சேரும்இதுவேஅணுச்சேர்க்கை ஆகும். (Nuclear fusion)

இந்த அணுச்சேர்க்கையின் பலனாக ஹைட்ரஜன் அணுக்கள்ஹீலியம் என்ற வேறு அணுக்களாக மாறும்பல மிலியன் டிகிரிவெப்பம்அமுக்கம் இருக்கும் போது தான் அணுச்சேர்க்கைநிகழும்அப்போது பெரும் ஆற்றல் வெளிப்படும்வெப்பமும்ஒளியும் தோன்றும்ஒரு நட்சத்திரம் இப்படியாகத் தான்உண்டாகிறது.

ஆரம்பத்தில் இருந்த வாயு மொத்தை எவ்வளவு பெரிதாகஇருந்தது என்பதைப் பொருத்து நட்சத்திரம் பெரியதாக அல்லதுசிறியதாக அமையும்.

எல்லா நட்சத்திரங்களுக்கும் பிறப்புஇளமைவளர்ச்சிக்கட்டம்,முதுமை மடிவு என எல்லாம் உண்டுஅந்த அளவில் ஒருநட்சத்திரத்தின் ஆயுள் பல கோடி ஆண்டுகளாகும்ஆனால்எல்லா நட்சத்திரங்களின் ஆயுளும் ஒரே மாதிரியானதுஅல்ல.முடிவும் ஒரே மாதிரியிலானது அல்ல.
நமது சூரியனும் ஒரு நட்சத்திரமே என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்சூரியன் நமக்கு ஒப்புநோக்குகையில் அருகாமையில்உள்ளதால் சூரியனாகத் தெரிகிறதுஇதே சூரியன்இப்போதுள்ளதைப் போல பல நூறு மடங்கு தொலைவில்இருந்தால் நட்சத்திரமாகத்தான் தெரியும்.

நிலவற்ற நாளில் இரவு வானில் தெரிகின்ற நட்சத்திரங்கள் மிகமிகத் தொலைவில் இருக்கின்ற காரணத்தால் தான் அவைவெறும் ஒளிப்புள்ளிகளாகத் தெரிகின்றனசூரியன் அந்ததொலைவுக்கு நகர்ந்து சென்று விட்டால் சூரியனும் ஒருநட்சத்திரமாகத் தெரிய ஆரம்பிக்கும்.
நம்து சூரியன் பூமியைப் போல பல நூறு மடங்கு பெரியதுஎன்றாலும் மற்ற பல நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டால் சூரியன்நடுத்தர சைஸ் கொண்டதே.

நமது சூரியன் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகின்றனஅதுஇன்னமும் 500 கோடி ஆண்டுகளுக்கு இருந்து வரும்ஆகசூரியனின் மொத்த ஆயுள் சுமார் 1000 கோடி ஆண்டுகள்.

ஆனால் சூரியனை விட பல மடங்கு பெரியதாக ஒரு நட்சத்திரம்இருப்பதாக வைத்துக் கொள்வோம்அதன் ஆயுள் சூரியனின்ஆயுளை விடக் குறைவாகத்தான் இருக்கும்சூரியனை விடவடிவில் மிகப் பெரியதான திருவாதிரை நட்சத்திரத்தின் மொத்தஆயுளே ஒரு கோடி ஆண்டுகள் தான்அதற்குக் காரணம் உண்டு.

ஒரு நட்சத்திரத்தில் அணுச்சேர்க்கை நிகழும் போது ஐன்ஸ்டைன்கூறிய தத்துவப்படி பொருளானது ஆற்றலாக மாறுகிறது.அதாவது பொருள் எரிந்து தீரும் போது தவிர்க்க முடியாதபடிபொருள் குறைந்து கொண்டே போகும்நமது சூரியனில்ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன்அணுச்சேர்க்கை வடிவில் எரிந்து தீர்ந்து கொண்டிருக்கிறது.
சூரியனை விட மிகப் பெரிய நட்சத்திரத்தில் பொருளானது இதைவிட வேகமாக எரிந்து தீர்ந்து கொண்டிருக்கும்.

நமது அன்றாட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் சிறியகுடும்பமாக இருந்தால் சமையல் காஸ் சிலிண்டர் அதிக நாள்வரும்பத்து பதினைந்து பேர் இருக்கிற பெரிய குடும்பமாகஇருந்தால் காஸ் சிலிண்டர் வேகமாகத் தீர்ந்து போகும்.

அது மாதிரியில் பெரிய நட்சத்திரத்தில் பொருளானது பயங்கரவேகத்தில் தீர்ந்து கொண்டிருக்கும்எனவே தான் சூரியனை விடபல மடங்கு பெரிய நட்சத்திரத்தின் ஆயுள்சூரியனின் ஆயுளைவிடக் குறைவாகவே இருக்கும்.

ஒரு நட்சத்திரத்தில் என்ன நிகழ்கிறது என்பதையும் நாம்கவனிக்கவேண்டும்நட்சத்திரத்தின் வெளிப்புறப் பொருள் உள்நோக்கி அமுக்கும்அதே நேரத்தில் உட்புறத்தில் நிகழும்அணுச்சேர்க்கையால் ஏற்படும் ஆற்றல் வெளியே வரப் பார்க்கும்.இந்த இரண்டும் சரிசமமாக இருக்கின்ற வரையில் நட்சத்திரம்காலம் தள்ளிக் கொண்டிருக்கும்.

 ஒரு நட்சத்திரத்தில் வெளிப்புறத்திலிருந்து உள் நோக்கிஅமுக்கும் சக்தியின் அளவு பெருமளவு குறையும் போது அந்தநட்சத்திரம் வெடித்து விடும்இப்படி வெடிக்கின்ற நட்சத்திரத்துக்குசூப்பர்நோவா என்று பெயர்நமது சூரிய மண்டலத்துக்கு வெளியேபல லட்சம் கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் எப்போதாவதுஇப்படி நட்சத்திரம் வெடிப்பது உண்டு.  இதை ஒரு நட்சத்திரத்தின்சாவுக் கட்டம் என்றும் சொல்லலாம்.

அப்படி சூப்பர் நோவா தோன்றும் போது இரவு வானில் அதுபிரகாசமாகத் தெரியும்கி.பி 1054 ஆம் ஆண்டில் இப்படி ஒருசூப்பர் நோவா தென்பட்டதுவானில் சூப்பர் நோவா காட்சிபார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும்இரவில் பல நாட்களுக்குசூப்பர் நோவா நட்சத்திரம் தெரிந்து கொண்டிருக்கும்ஆனால்சூப்பர் நோவா வெடிப்பின் போது மிக ஆபத்தான கதிர்கள்தோன்றும்இவை பூமியைத் தாக்கினால் உயிரினத்துக்கு ஆபத்து.பூமியிலிருந்து சுமார் 50 ஒளியாண்டு தொலைவுக்கு அப்பால்சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்டால் நமக்கு பிரச்சினை இல்லை.ஆனால் 50 ஒளியாண்டுக்குக் குறைவான தூரத்தில் சூப்பர் நோவாவெடிப்பு ஏற்பட்டால் மனித இனத்துக்கே ஆபத்து.

வானில் எப்போதோ சூப்பர் நோவா வெடிப்பு ஏற்பட்ட இடத்தைநோக்கினால் மெல்லிய புகை மண்டலம் இருப்பது போன்றுகாட்சி அளிக்கும்அங்கு ஏற்கனவே நட்சத்திரம் இருந்த இடத்தில்அதாவது நட்சத்திரம் மடிந்து போன இடத்தில் ஒரு நட்சத்திரம்இருக்கும்அதுவே நியூட்ரான் நட்சத்திரமாகும்வெடிப்புக்குப்பிறகு மிஞ்சுவதே நியூட்ரான் நட்சத்திரம்.

சூரியனைப் போல   எட்டு முதல் 15  மடங்கு பெரியதானநட்சத்திரங்களே   அவற்றின் இறுதிக் கட்டத்தில் இவ்விதம்வெடித்து நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறுகின்றன என்றுநிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதற்கு ஏன் நியூட்ரான் நட்சத்திரம் என்று பெயர் வந்ததுநாம்பழையப்டி அணு சமாச்சாரத்துக்கு வருவோம்அணுவுக்குள்எலக்ட்ரான்புரோட்டான்நியூட்ரான் ஆகியவை இருக்கும் என்றுசொன்னோம்நியூட்ரான் நட்சத்திரத்தில் நியூட்ரான்கள் மட்டுமேஇருக்கும்

அந்த நட்சத்திரத்தில் அதுவரை இருந்த புரோட்டான்களும்எலக்ட்ரான்களும் சூப்பர்நோவா வெடிப்பின் போது தோன்றும்பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஐக்கியமாகி நியூட்ரான்களாகி விடும்அதாவது ஒரு புரோட்டானுடன் ஒருஎலக்ட்ரான் சேர்ந்து கொண்டால் அது நியூட்ரான் ஆகிவிடும்

அந்த நட்சத்திரத்தில் அதுவரை அடங்கியிருந்த அணுக்கள்அனைத்திலும் புரோட்டான்களிலிருந்து எலக்ட்ரான்கள் விலகிஇருந்தனஅதாவது அந்த அணுக்களில் நிறையக் காலியிடம்இருந்ததுபுரோட்டான்களுடன் எலக்ட்ரான்கள் ஐக்கியமான பிறகுஅதுவரை இருந்த காலியிடம் மறைந்து போய்விட்டிருக்கும்.

எனவே அந்த நட்சத்திரம் வடிவில் சுருங்கி நியூட்ரான்நட்சத்திரமாகி விடுகிறது.  பஞ்சு மிட்டாயை பசக் என்றுஅமுக்கினால் அது சிறிய உருண்டையாக மாறி விடுவது போலஅது வரை வடிவில் பெரியதாக் இருந்த நட்சத்திரம் வடிவில்சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாக உருவெடுக்கிறது..

எனவே ஒரு நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து ஒரு டீஸ்பூன்பொருளை எடுத்து எடை போட்டால் அது ஒரு மலையின்எடைக்குச் சமமாக இருக்கும்.

ஒரு பஞ்சு மூட்டையை ஒருவரால் எளிதில் தூக்க முடியும்.அதே கோணியில் பஞ்சுக்குப் பதில் புளியை அடைத்தால் அந்தமூட்டையை எளிதில் தூக்க முடியாதுஅதே கோணியில்சிமெண்டை அடைத்தால் அந்த மூட்டையை கையால்நகர்த்துவதே கஷ்டம்நியூட்ரான் நட்சத்திரம் என்பது புளிஅடைத்த கோணிப்பை போன்றதுஅதுவும் கூட சரியில்லைஒருமூட்டை புளியை ஒரு ஹாண்ட் பேக்கில் அடைக்க முடிந்தால் எப்படியோ அது மாதிரியில் நியூட்ரான் நட்சத்திரம் உள்ளது

ஆரம்பத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டர் குறுக்களவு கொண்டதாகஇருந்த அந்த நட்சத்திரம் நியூட்ரான் நட்சத்திரமான பிறகு அதன்குறுக்களவு 20 கிலோ மீட்டர் அளவுக்கு இருக்கலாம்.

ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் காணமுடியாதுபெரும்பாலான நியூட்ரான் நட்சத்திரங்கள் பல்சார்எனப்படும் நட்சத்திரங்களாக விளங்குகின்றனஅதாவது ஒருநியூட்ரான் நட்சத்திரம் ரேடியோ அலைகள் வடிவில் துடிப்புகளைவெளிவிடுவதாக இருந்தால் அது பல்சார் எனப்படுகிறது.ஆங்கிலத்தில் இதை pulsating star என்பார்கள்அதுவே சுருக்கமாகபல்சார் எனப்படுகிறது.

எல்லா நட்சத்திரங்களும் தமது அச்சில் சுழலும்நமது சூரியனும்தனது அச்சில் சுழல்கிறதுஅது ஒரு முறை சுழன்று முடிக்கசுமார் 30 நாட்கள் ஆகின்றனபல்சார் நட்சத்திரங்கள் வடிவில்மிகச் சிறியது என்பதால் அசுர வேகத்தில் சுழலும்ஒருவினாடியில் 20 முறை சுழல்கின்ற பல்சார் நட்சத்திரங்கள் உண்டு.அபூர்வமாக ஒரு பல்சார் வினாடிக்கு 1122 முறை சுழ்ல்கிறது.நமது ஆகாய கங்கை அண்டத்தில் இதுவரை ஆயிரம் பல்சார்நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பல்சார் நட்சத்திரங்கள் ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன.எனவே ரேடியோ டெலஸ்கோப்புகள் மூலம் பல்சார்கள்இருக்குமிடங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது.
  அண்டவெளியில் நியூட்ரான் நட்சத்திரங்கள் இருக்க வேண்டும்என 1930 களிலேயே கொள்கை அளவில் விஞ்ஞானிகள் கூறினர்.ஆனால் 1967 ஆம் ஆண்டில் தான் முதல் நியூட்ரான் நட்சத்திரம்கண்டுபிடிக்கப்பட்டதுஇங்கிலாந்தில் ஜோசிலின் பெல் என்னும்கல்லூரி மாணவி தான் அந்த நியூட்ரான் நட்சத்திரத்தைக்கண்டுபிடித்தார்

பூமிக்கு அதாவது நமது சூரியனுக்கு அருகில் நியூட்ரான்நட்சத்திரம் எதுவும் இல்லைநமக்கு மிக அருகில் இருப்பதாகசொல்லப்படும் நியூட்ரான் நட்சத்திரம் 500 ஒளியாண்டுதொலைவில் உள்ளதுஇது சப்த ரிஷி மண்டலத்துக்கு அருகேஉள்ளதுஇதற்கு ஆங்கில சினிமா ஒன்றில் வரும் வில்லனின்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் ஹீரோக்களுக்குத் தான் கிரேட் ஸ்டார்டாப் ஸ்டார்என்றெல்லாம் பட்டம் சூட்டுகிறார்கள்அதன்படி பார்த்தால் இந்தநியூட்ரான் நட்சத்திரத்துக்கு ஹாலிவுட் சினிமா ஹீரோவின்பெயர் வைக்கப்பட்டிருக்க வேண்டும்எப்படி வில்லனின் பெயர்வைத்தார்கள் என்பது புரியவில்லை.
என்.ராமதுரை
Reactions

Post a Comment

0 Comments