அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

புவி தன் ஈர்ப்பு விசையால் அனைத்துப் பொருட்களையும் ஈர்த்துக்கொள்கிறது என்றால், புகை மட்டும் எப்படி மேல் நோக்கிச் செல்கிறது?


புகை மேல் நோக்கிச் செல்வது ஏன்?

காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியைவிட அதிகமாக இருக்கும். இதனால் புகையைவிட, காற்றின் மீது புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அதனால் காற்று கீழ் நோக்கி இறங்கும். அடர்த்தி குறைந்த புகை மேல் நோக்கிச் செல்லும். அதாவது புவி ஈர்ப்பு விசையால்தான் புகை மேலே செல்கிறது. இந்தப் புகையைப்போலதான் மென்மையான நீராவியும் மேல் நோக்கிச் செல்கிறது. அது மேகமாக மாறி, பின்னர் மழையாகப் பொழிகிறது. புவி ஈர்ப்பு விசை இல்லாவிட்டால் புகையோ, நீராவியோ மேல் நோக்கிச் செல்லாது.

மேரி க்யூரியின் குடும்பம்தான் இதுவரை அதிகமான நோபல் பரிசுகளை வென்றுள்ளது என்று படித்தேன். யாருக்கெல்லாம் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது?

1903-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மேரிக்கும் அவரது கணவர் பியரி க்யூரிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1911-ம் ஆண்டு வேதியலுக்காக இரண்டாவது நோபல் பரிசைப் பெற்றார் மேரி. இவரது மூத்த மகள் ஐரின் ஜோலியட்டும் அவரது கணவர் பிரெடரிக் ஜோலியட்டும் 1935-ம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்கள். ஒரே குடும்பத்தில் 4 பேர் நோபல் பரிசுகளைப் பெற்றவர்கள். இதில் மேரி இரட்டை நோபல் பரிசுகளை வென்றவர். இவ்வளவு சிறப்பு மிக்க குடும்பம் இதுவரை வேறு இல்லை. பின்னர், தான் பெற்ற 2 நோபல் பரிசுகளையும் போரில் காயம் அடைந்த வீரர்களின் நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டார் மேரி!

நன்றி : இந்து நாளிதழ்

Reactions

Post a Comment

1 Comments

  1. Marie curie 2nd daughter also got noble prize... Pl add it

    ReplyDelete

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது