அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Thursday, May 31, 2018

பிளஸ் 1 மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

பிளஸ் 1 தேர்வில், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணை தேர்வு, ஜூலை, 5ல் துவங்க உள்ளது.பிளஸ் 1 பொது தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், 8.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்கள், சிறப்பு துணை தேர்வு எழுதலாம். அவர்களுக்கு, ஜூலை, 5 முதல் சிறப்பு துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு, விண்ணப்பிக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


மதிப்பெண் பட்டியல் எப்போது: தேர்வு எழுதியவர்கள், தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம், ஜூன், 4 முதல் மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம். அரசு தேர்வுத்துறையால், அச்சடிக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் வரை மட்டுமே, இந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.   
மாணவர்களுக்கு, அவர்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரும், தனித்தேர்வர்களுக்கு, அவர்கள் தேர்வு எழுதிய மையத்தின் தலைமை ஆசிரியரும், சான்றொப்பம் அளித்தால் மட்டுமே, மதிப்பெண் பட்டியல் செல்லும். எனவே, மதிப்பெண் பட்டியலில் சான்றொப்பம் பெற வேண்டும். 
மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்படி: பிளஸ் 1 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டலுக்கும், ஜூன், 1, 2 மற்றும், 4ம் தேதிகளில், பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும். மொழி பாடம் ஒன்றுக்கு, தலா, 550 ரூபாயும், முக்கிய பாடங்களுக்கு, தலா, 275 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விடைத்தாள் மறுமதிப்பீடு தேவை என்றால், அவர்கள் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும். அதை ஆய்வு செய்து, மறுமதிப்பீடு தேவை என்றால் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கேட்பவர்கள், மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க தேவையில்லை. விடைத்தாள் நகல் பெற்று, மறுமதிப்பீடு தேவையா அல்லது மறுகூட்டல் தேவையா என்பதை முடிவு செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டல், மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் ஒப்புகை சீட்டை பாதுகாக்க வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே, முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது