அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Monday, June 4, 2018

கல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல்

பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டார கல்வி அலுவலகங்களில் அலுவலர்கள் மட்டுமே அடிக்கடி மாற்றப்படுகின்றனர். அவர்களுக்கு கீழே பணிபுரியும் சிலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர்.

அவர்கள் ஆசிரியர்கள் இடமாறுதல், பணப்பலன் வழங்குதல், நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் அடிக்கடி தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது.இதனை தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள், பள்ளி துணை ஆய்வாளர், கண்காணிப்பாளர், இருக்கைப் பணி கண்காணிப்பாளர், உதவியாளர், இளைநிலை உதவியாளர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது.
இதற்கான பணியை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொண்டு வருவதால், பணியாளர்கள் கலக்கமடைந்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது