அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Saturday, June 2, 2018

'நிபா' வைரஸ் எதிரொலி : பள்ளி திறப்பு தள்ளிவைப்பு

கோழிக்கோடு: கேரள மாநிலத்தில் பரவி வரும், 'நிபா' வைரஸ் எதிரொலியாக, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளின் திறப்பை, 12ம் தேதிக்கு, மாநில அரசு தள்ளி வைத்துள்ளது. கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது சாரி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நிபா வைரஸ் தாக்குதலுக்கு, 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களுடன் தொடர்புடைய, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று, மாநில சுகாதார துறை அமைச்சர், கே.கே.சைலஜா மற்றும் சுகாதார துறை கூடுதல் தலைமை செயலர், ராஜிவ் சதாநந்தன் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில், கோழிக்கோடு மாவட்ட பள்ளி, கல்லுாரிகளை, 12ல் திறக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வை தவிர, மாநில பணியாளர் தேர்வாணைய நேர்முக தேர்வு உட்பட பிற தேர்வுகளை தள்ளி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, நிபா வைரசை கட்டுப்படுத்தும், நோய் தடுப்பு மருந்தை அனுப்பும்படி, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் அரசுக்கு, கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது