அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Wednesday, June 6, 2018

மாணவர் பிரச்னைக்கு உளவியல் தீர்வு குழு

உளவியல் பிரச்னைக்கு  தீர்வு  காண, குழு அமைக்கப்பட்டுள்ளது' என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார்.தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கை: பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்க, மாநில அளவில் பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு கூட்டத்தில் சமூக, பொருளாதார வேறுபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, சமூக ஆதரவின்மை, பெற்றோரின் மதுப் பழக்கம்,ஒழுக்கமின்மை,படிப்பில் போதிய கவனமின்மை உட்பட மாணவர்களின் பல்வேறு உளவியல் ரீதியான பிரச்னைகள் விவாதிக்கப்பட்டன.தீர்வு காண ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு, தகுதியான ஒரு ஆசிரியரை பொறுப்பாசிரியராக நியமித்து உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும். அவர்களுக்கு பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர், பள்ளி கல்வி இயக்குனருக்கு பாராட்டுக்களை நீதிமன்றம் தெரிவிக்கிறது'என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது