அனைத்தும் கை எட்டும் தூரமே... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Sunday, August 12, 2018

சித்தா படிப்பு: 14ல் விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, 14 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.


சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு, ஆறு அரசு கல்லுாரிகளில், 396 இடங்கள்; 23 சுயநிதி கல்லுாரிகளில், 916 இடங்கள் உள்ளன. பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள், சென்னை, நெல்லை - பாளையங்கோட்டை, மதுரை - திருமங்கலம் மற்றும் நாகர்கோவில் - கோட்டாரில் உள்ள, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 14 முதல், செப்., 5 வரை வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செப்., 5ம் தேதி மாலை, 5:30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு

1.கல்வி அமுது வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..

3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு கல்வி அமுது எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..

4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய கல்வி அமுது வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..

அன்புடன்: கல்வி அமுது